உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு நட்டா அறிவுரை

மறு ஆய்வு செய்து கொள்ளுங்கள் : எதிர்க்கட்சிகளுக்கு நட்டா அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள், தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும், '' என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதத்தில் ராஜ்யசபாவில் நட்டா பேசியதாவது: எதிர்க்கட்சிகள் தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும். 2005 டில்லி தொடர் குண்டுவெடிப்பு, 2006 வாரணாசி பயங்கரவாத தாக்குதல், 2006 மும்பை உள்ளூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு அப்போதைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தகம், , பயங்கரவாதம், சுற்றுலா தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.2008 ஜெய்ப்பூரில் இந்தியன் முஜாகிதீன் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பிறகு அப்போதைய காங்கிரஸ் அரசின் திருப்திபடுத்தும் அரசியலின் எல்லையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தற்போதுள்ள போலீஸ், ராணுவம் தான் அப்போதும் இருந்தது. ஆனால், அரசியல் உறுதி இல்லை. 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 2009ல் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் எந்த குறிப்பும் இல்லை. முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசும் போது, '' எல்லைப்பகுதியை மேம்படுத்தக்கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. வளர்ச்சி பெறாத எல்லைப்பகுதி தான், வளர்ச்சியடைந்த எல்லையை விட சிறந்தது, '' எனக்குறிப்பிட்டார். அதேபோல் முன்னாள் உள்துறை அமைச்சர், ' எனக்கு காஷ்மீர் போகவே பயமாக இருக்கிறது,' என்றார். நாம் இந்த நாட்டில் இருளில் வாழ்ந்தோம். 2014 - 2025ல் ஜம்மு காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடப்பது தடுக்கப்பட்டுள்ளது.பிரதமர், ' உரி தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்களை தப்ப விட மாட்டோம்,' எனத் தெரிவித்தார். அடுத்த 3 நாட்களுக்குள், சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டு, பயங்கரவாதிகளின் பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டன. இது தான் மாற்றமடையும் இந்தியா. என்ன செய்வது பார்ப்போம் எனக்கூறியவர்களுடன் ஒப்பிட்டு, தற்போதைய அரசியல் உறுதியை பாருங்கள். இவ்வாறு நட்டா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ராஜா
ஜூலை 31, 2025 22:16

என்னதான் சொன்னாலும் பக்கத்து நாட்டு முதுகெலும்பை உடைத்து இரண்டாகப் பிரித்து புதிய நாட்டை உருவாக்கிய இரும்புத் தலைவி இந்திரா அம்மாவின் துணிச்சலுக்கு ஈடாகாது மக்கா , என்ன நான் சொல்ரது சரி தானே


ராஜா
ஜூலை 31, 2025 00:21

ஆள் காட்டி விரலை உயர்த்திக் காட்டி பேசினவன் ஒருவனும் உருப்பட்ட மாதிரி சரித்திரம் கிடையாது , மீதம் இடைவேளைக்கு பின் தான் தெரிய வரும் .


vivek
ஜூலை 31, 2025 06:10

நம்ம முதல்வர் கூட கையை உயர்த்தி பேசுவார்....வருகிறது ஆப்பு


M Ramachandran
ஜூலை 30, 2025 22:31

MGR சொன்ன தீய சக்திகளில் இதுவும் ஒன்று போலிருக்கு.


SUBBU,MADURAI
ஜூலை 30, 2025 19:02

மோடி அரசு துணிச்சலான நடவடிக்கைகளால் சர்ஜிக்கல் தாக்குதல்கள், பாலகோட் மற்றும் இப்போது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களைத் தாக்குதல் மூலம் நாட்டின் தரத்தை உயர்த்தியது. நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செயல்பட்டாலும், மக்கள் அதற்கு மேலும் அதிகமாக எதிர் பார்க்கிறார்கள் அதுதான் உண்மையான தலைமையின் விலை. எனவே மறு ஆய்வு செய்ய வேண்டியது பாஜகதானே தவிர காங்கிரஸ் அல்ல


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 30, 2025 21:10

முழு உண்மை .........


M Ramachandran
ஜூலை 30, 2025 17:16

நடவடிக்கையயை எடுத்தாங்களே. நம் CBI டைரக்டரையே கைது செய்தாங்களே ஞ்யாபகம் இல்லையா? மஹாராஷ்டிராவின் முதன் மந்தி ரியாக இருந்த சரத் பவர் சொல்படி தாவுத் இப்ராகிம் கூட்டாளி மரணித்த 250 பேர் உயிர் முக்கிய மில்லை சிதம்பரத்திற்கு. இவனெல்லாம் எப்படி பேசுவான் அயல்நாட்டு காரன் அறை பவுன் குடுத்த அம்மணமா கூட ஓடுவான். சட்டத்தை கடுமையாகா மாற்ற வேண்டி இருக்கு. மறுபடியும் எமெர்ஜெண்சி கொண்டுவந்தால் நல்லது தீய சக்திகளை பலியிடுவதில் நாடு சுபிச்சம் அடையும். கான்க்ரசை கண்டாலெ எரிச்சல் வருமளவிற்கு இருக்கு.


V Venkatachalam
ஜூலை 30, 2025 19:35

கான்- கிராஸ் ஸின் கேவலத்தை இதை விட யாராலும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க முடியாது.


sankarkumar
ஜூலை 30, 2025 17:09

ஆஹா அருமை நட்டா ஜி. உண்மையாக எதிர்க்கட்சிகள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்


M Ramachandran
ஜூலை 30, 2025 17:03

அயல்நாட்டுக்காரனை கண்டால் திரும்பி நிற்கும் ஜாதி. நாட்டை நாட்டின் ராணுவததை காட்டிக்கொடுக்கும் மனா நிலை விலை மாதர் போல் காசுக்கு கூவி விற்கும் கும்பல். திருட்டு கும்பல்மேல் பல கேசுகள் தைரிய மாக நடவடிக்கையயை எடுக்காததின் விளைவின் விலைய்யவு. இனியாவது பிஜேபி அரசு விழித்து கொள்ளுமா ?


சமீபத்திய செய்தி