உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்

4 மாதங்களுக்கு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர்: சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சியில் நான்கு மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்ட விவகாரத்தில், பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சாலையை சீரமைத்தல், நடைபாதை அமைத்தல் மற்றும் சாலைகளில் கோடு வரைதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.2.2 கோடியில் டெண்டர் விடப்பட்டது. லங் கார்டன் சாலை, ராஜாஜி சாலை, ராஜா முத்தையா சாலை, யானை கவுனி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பணிகள் நடக்க உள்ளதாக அந்த டெண்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், இந்த டெண்டர்,சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருந்ததும், இதற்காக மற்ற ஒப்பந்ததாரர்கள் அளித்த ஏலத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட பணிகள் அனைத்தும் நான்கு மாதத்திற்கு முன்பே முடிவடைந்தது பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது.இது குறித்து அறிந்ததும் விசாரணைக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சித்ராதேவியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சியில் நான்கு மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்ட விவகாரத்தில், பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Bhaskaran
மே 07, 2025 12:42

பயிற்சி போதவில்லபோலிருக்கு


Hariharan Mannaparasuraman
மே 07, 2025 11:57

எந்த ஒரு டெண்டர்லும் மைண்டெனன்ஸ் காலம் கண்டிப்பாக உண்டு . அந்த காலத்தில் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை காண்ட்ராக்டர் அவர் செலவில் சரி செய்ய வேண்டும் . இதை ஏன் செய்யே வில்ல? புரிய வில்லை


rajan
மே 06, 2025 21:27

This is the dravida model which is all praise around the world. This type of corruption never occured which is to be practised by others in INDI alliance.


மீனவ நண்பன்
மே 06, 2025 21:13

இடத்தின் பெயரை மாற்றி போட்டிருந்தால் மாட்டியிருக்க வாய்ப்பில்லை ..அக்கவுண்ட்ஸ் வெட்டிங் இல்லாம எப்படி டெண்டர் கோர முடியும் ?


அப்பாவி
மே 06, 2025 21:08

திருட்டு திராவிடி... இதுக்கு முன்னாடி எத்தனை டூப்ளிகேட் டெண்டர் உட்டு எத்தனை கோடி சாப்புட்டாரோ? இவரை மீண்டும் பணிக்கு அமர்த்தினால், மேலே அமைச்சர் வரைக்கும் கமிசன் போயிருக்குன்னு அர்த்தம்.


ரிஷி கௌதம்
மே 06, 2025 20:57

மிகவும் மட்டமான மனிதர்கள். மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதற்காகவே அதிகாரத்தில் உள்ளார்கள். பிணந்தின்னிக் கழுகைவிட மோசமானவர்கள்...


Nagarajan S
மே 06, 2025 20:28

முன்பே முடிந்த பணிகளுக்கு 2.2 கோடி ரூபாய் டெண்டர் விட்டு மொத்த பணத்தையும் சுருட்ட பார்த்த மாநகராட்சி, ஒரேயொரு அதிகாரியை மட்டும் கண் துடைப்புக்காக சஸ்பெண்ட் செய்தால் போதுமா?மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்று கண்டறிய வேண்டாமா? இதைப்போல இன்னும் எத்தனை பணிகளில் மோசடிசெய்து எவ்வளவு கோடி மக்கள் வரிப்பணத்தை சுருட்டியுள்ளார்களோ ? இதனை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்.


raj82
மே 06, 2025 20:23

மேயர் அம்மா லேண்ட் மட்டும்னுதான் வாங்கிச்சு ஹவுஸ் எப்போ கருத்து ?


Karthik
மே 06, 2025 20:21

அடடா.. வட போச்சே..


Raja
மே 06, 2025 20:17

இந்த ஊழல் குறித்து சவுக்கு சங்கர் நான்கு நாட்கள் முன்னதாகவே கூறி விட்டார்.


முக்கிய வீடியோ