உத்தராகண்டுக்கு ரெட் அலர்ட்; நிலச்சரிவு அபாயம்... தயார் நிலையில் இருக்க முதல்வர் உத்தரவு
டேராடூன்: உத்தராகண்டில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்ட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டேராடூன், தெஹ்ரி, பவுலி மற்றும் ஹரித்வார் ஆகிய பகுதிகளில் இன்று அதிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டு ,ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0r0rr25k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாளை (செப்.,2) டேராடூன், உத்தரகாசி, ருத்ரப்பிரயாக், சமோலி மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களின் சில இடங்களில் அதிக கனமான முதல் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, டேராடூன், தெஹ்ரி, பவுலி மற்றும் சம்பாவத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளிகள் இன்று மூடப்படுள்ளன.இந்த நிலையில், மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகள் முழு நேரமும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மூத்த அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய அவர், 'வரும் சில நாட்கள் சவாலானதாக இருக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்று கூறினார்.பல பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் நீர் தேங்கும் நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த முதல்வர் தாமி கேட்டுக்கொண்டார்.