உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய விசா வகை 9 ஆக குறைப்பு; விண்ணப்ப படிவங்களிலும் மாற்றம்!

இந்திய விசா வகை 9 ஆக குறைப்பு; விண்ணப்ப படிவங்களிலும் மாற்றம்!

-நமது நிருபர்-இந்தியா வருவதற்கு வழங்கப்படும் விசாக்களின் முக்கிய பிரிவுகள் 13ல் இருந்து 9 ஆக குறைக்கப்பட்டுள்ளது.துணை பிரிவுகள் 49ல் இருந்து 23 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.புதிய 9 முக்கிய விசா பிரிவுகள்:* வியாபாரம்* தூதரகம்* வேலைவாய்ப்பு* செய்தியாளர்* மருத்துவம்* அதிகாரப்பூர்வ விசா* மாணவர் விசா* பார்வையாளர் (Visitor)* இதர விசா (இதில் இந்திய வம்சாவளியினர் மற்றும் நீண்ட கால விசா சார்ந்தவர்கள் அடங்குவர்)விண்ணப்பப் படிவங்களில் கேட்கப்படும் தகவல்கள் 65% முதல் 70% வரை குறைக்கப்பட்டு உள்ளன. விசா படிவங்களை நிரப்புவதற்கான நேரத்தையும், சிரமத்தையும் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த புதிய விசா முறை இந்த ஆண்டின் இறுதிக்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை, மருத்துவ சுற்றுலா மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் வருகையை அதிகரிப்பதுடன், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.இந்தியா தற்போது 13 துணைப் பிரிவுகளின் கீழ் மின்னணு பயண அங்கீகாரத்தின் மூலம் இ-விசாக்களைச் செயல்படுத்துகிறது. இந்த வசதி 172 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்குக் கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

priyan, vadanad, madurai
நவ 12, 2026 08:27

வந்தேறிகள், வெளிநாட்டு கைக்கூலி, dhimag naxals எச்சரிக்கை


VENKATASUBRAMANIAN
நவ 12, 2026 08:05

எதிர்கால தலைமுறை தப்பித்தது. இல்லையெனில் ஒரு தலைமுறையே அழிந்து போயிருக்கும்.