உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏபிவிபி வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா

ஏபிவிபி வெற்றி தேசமே முதன்மை என்ற நம்பிக்கையின் பிரதிபலிப்பு: அமைச்சர் அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி பெற்ற வெற்றியானது, தேசமே முதன்மையானது என இளைஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.-டில்லி பல்கலை. மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி, செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பல பொறுப்புகளில் பாஜ மாணவர் அமைப்பான ஏபிவிபி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் வெற்றியை தொண்டர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கொண்டாடி வருகின்றனர்.இந் நிலையில் ஏபிவிபி வெற்றி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது: டில்லி பல்கலை. மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபியின் சார்பில் மகத்தான வெற்றியை பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியானது தேசம் தான் முதலில் என்ற சித்தாந்தத்தின் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் பிரதிபலிப்பு ஆகும். இந்த வெற்றி மாணவர் சக்தியை, தேசிய சக்தியாக மாற்றும் பயணத்தை வேகப்படுத்தும். இவ்வாறு அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.பாஜ தலைவர் நட்டா தமது எக்ஸ் வலைதள பதிவில், சுவாமி விவேகானந்தர் கொள்கைகளால் வழிநடத்தப்படும் ஏபிவிபி எப்போதுமே இளைஞர்களை தேசியம் என்ற உணர்வுடன், தன்னமல்லமற்ற சேவையுடன் ஊக்குவித்து வருகிறது. இந்த வெற்றி தேசமே முதலில் என்பதை காட்டுகிறது என்று கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Venugopal S
செப் 20, 2025 10:02

ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது போல் தான் இதுவும். ஆட்சி, அதிகாரம், பணபலம், ஆள்பலம் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு மாணவர் யூனியன் தேர்தலில் வெற்றி பெறுவது பெரிய உலக மஹா சாதனையா?


Iyer
செப் 20, 2025 04:41

ABVP வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஆனால் பாடத்திட்டங்களில் - ஹிந்துத்வத்தை - புகுத்த இவர்களுக்கு தைர்யம் உண்டா? யோகா, த்யானம், சூரியநமஸ்காரம், பிராணாயாமம், போன்ற - மிக அவசியமான கலைகளை பள்ளி, கல்லூரிகளில் கட்டயமாக்கும் தைர்யம் உண்டா சிறிது சிறிதாக - BRITISH MODEL கல்வியை ஒழித்துவிட்டு இந்தியாவின் GURUKULAM MODEL கல்வியை புகுத்தவேண்டும். தமிழர்களின் - இயற்கைவைத்தியமும் இயற்கை விவசாயமும் உலகிலேயே சிறந்த கலைகள் இந்த இரண்டையும் பாடத்திட்டங்களில் புகுத்தவேண்டும். நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்கவேண்டும்.


N Sasikumar Yadhav
செப் 20, 2025 04:30

தேசத்திற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கும் தேசதுரோக கட்சியான ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கட்சிக்கு யாரும் ஓட்டுப்போட வரமாட்டார்கள் . ஆகவே தேசத்திற்கு எதிராகவும் ஓட்டுப்பிச்சைக்காக இசுலாமிய பயங்கரவாத கும்பலுங்களுக்கு ஆதரவாகவும் பேசுவதை ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் கைவிட வேண்டும்


திகழ்ஓவியன்
செப் 19, 2025 20:14

இங்கும் திருட்டு வோட்டு விளையாடி இருக்குமோ நாளை தான் தெரியும்


Narayanan Muthu
செப் 19, 2025 20:41

நிறைய பேரை ஓட்டுப்போட வரவிடாம தடுத்திருப்பாங்க. செய்யுற தேர்தல் மோசடியில் இதுவும் ஒரு பிரபலமான மோசடிதான்.


Mohanakrishnan
செப் 19, 2025 20:46

திருட்டு மாடல் ஜெயித்தால் நேர்மை பப்பு கூட்டணி ஜெயித்தால் நேர்மை வேறு எவர் ஜெயித்தாலும் அநியாயம் இதற்கு பெயர் தான் திருட்டு திராவிட உலக மாடல்


Karthik Madeshwaran
செப் 19, 2025 19:24

ஒவ்வொரு மாநிலத்தையும் அந்த அந்த மாநில கட்சியே ஆள வேண்டும். அப்போது தான் அம்மாநில வளர்ச்சி, மக்களுக்கான முன்னுரிமை இருக்கும் என்பதே உண்மை. என்னதான் தேசிய கட்சிகள் இருந்தாலும் அதன் முடிவெடுக்கும் அதிகாரம் டெல்லியில் உள்ளவர்களிடம் தான் இருக்கும். இங்கே உள்ளவர்கள் வெறும் சாவி கொடுத்தால் ஆடும் பொம்மைகள் தான். அதனால் தான் வடக்கே பல மாநிலங்கள் இன்னுமே முன்னேறவில்லை. எப்போதும் அந்தந்த மாநில கட்சிக்கே ஆதரவு. அதுதான் சரியும் கூட.


ஆரூர் ரங்
செப் 19, 2025 20:01

குஜரா‌த், கர்நாடகா ஜிஎஸ்டி ஜிடிபி யில் முன்னணியில் உள்ளன. குஜராத்தில் மாநிலக் கட்சிகளே இல்லை. கர்நாடகாவில் தேசிய கட்சி இல்லாத அமைச்சரவை இருந்ததில்லை. கேரளா புதுச்சேரியில் இதே நிலைதான். வலுவான மாநிலத் தலைவர்கள் உருவாக விடாமல் கெடுத்தது இந்திரா காந்தி. இது கருணாநிதியின் கூற்று .


தமிழ்வேள்
செப் 19, 2025 22:13

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு முற்றிலும் கலைக்கப்பட்டு பிராவின்ஸ் அமைப்பு வந்தால் பிராந்திய கட்சி என்பது பிராந்திய நலன் பேணும் அமைப்பாக இருக்கும் வாய்ப்பு நிலவும்.


பாரதன்
செப் 20, 2025 07:49

மாநில கட்சிகள் தேவையில்லை. தேசியக் கட்சிகள் மாநில தேவையை பார்த்துக் கொள்ளும். பாரதத்தின் வளர்ச்சிக்கு தேசிய கட்சிகள் தான் தேவை.