சீர்திருத்தம் தேவை!
போலீசாரின், ஆவண சரிபார்ப்புக்கு பின் ஒருவருக்கு அளிக்கப்படும் பாஸ்போர்ட், உள்நாட்டு குடியுரிமையை உறுதிப்படுத்தவில்லை எனில், எதுதான் அதை உறுதிப்படுத்தும்? பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றை இந்திய குடியுரிமைக்கான சான்றுகளாக அங்கீகரிக்கும் வகையில் நம் சட்ட அமைப்பில் சீர்திருத்தம் தேவை. சசி தரூர் லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
வலுவாக உள்ளது!
பிளவு ஏற்பட்டாலும், எங்கள் கட்சி வலுவாக உள்ளது. பணம், அதிகாரம் மற்றும் பாதுகாப்பிற்காக சிலர் கட்சி மாறியுள்ளனர். உண்மை தொண்டர்கள், உத்தவ் தாக்கரேவுடன் உள்ளனர். அடுத்த தலைமுறையினர் படிப்படியாக கட்சிப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்; ஆதித்யா தாக்கரேவுக்கு தலைமை ஏற்கும் திறன் உள்ளது. சஞ்சய் ராவத் ராஜ்யசபா எம்.பி., உத்தவ் சிவசேனா பிரிவுமுரண்பாடான நடவடிக்கை!
கேரள அரசு, போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்துக்கு இடையே குறைந்த அளவு ஆல்கஹால் வகை மதுபானங்களின் வரியை குறைத்துள்ளது முரண்பாடான நடவடிக்கை. இது, இளைஞர்களை மதுவை நோக்கி செல்ல வழிவகுக்கும் செயல். எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும். ராஜீவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்