உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம்பல் மசூதி விவகாரம் ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு

சம்பல் மசூதி விவகாரம் ஆய்வுக்கு தடை விதிக்க மறுப்பு

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தின் ஷாஹி ஜுமா மசூதியில் ஆய்வு நடத்த விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.உ.பி.,யில், சம்பல் மாவட்டத்தில் இருந்த ஹரிஹர் கோவில், 1526ல் முகலாய மன்னர் பாபர் ஆட்சி காலத்தின் போது இடிக்கப்பட்டு, அங்கு ஷாஹி ஜுமா மசூதி கட்டப்பட்டதாக ஹிந்து அமைப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.கடந்த 2024 நவம்பரில் இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. இதற்காக, வழக்கறிஞர் ஒருவரை நியமித்தது. மசூதியில் இரண்டு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.இந்நிலையில், மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வுக்கும், மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கும் தடை விதிக்க கோரி, மசூதி கமிட்டி சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் பிரச்னை ஏதும் இல்லை' என தெரிவித்ததுடன், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்தது. மேலும், மசூதியில் ஆய்வு செய்ய மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உறுதி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை