உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காப்பியடிக்க அனுமதி மறுப்பு: ஆசிரியர் மீது பட்டாசு வீச்சு

காப்பியடிக்க அனுமதி மறுப்பு: ஆசிரியர் மீது பட்டாசு வீச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம் : கேரளாவில் பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், ஆசிரியரின் கார் மீது பட்டாசுகளை வீசினர்.கேரளாவில் தற்போது பிளஸ் 2 அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. மலப்புறம் மாவட்டம் திரூரங்காடி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நேற்று மாணவர்கள் தேர்வு எழுத சென்றனர்.அப்போது சில மாணவர்கள் காப்பியடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர், அதற்கு அனுமதிக்கவில்லை. காப்பி அடிக்க முடியாத மாணவர்கள், தேர்வு முடிந்த பின், அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.அந்த ஆசிரியர் தன் காரில் பள்ளியிலிருந்து புறப்பட்டார். அப்போது அந்த மாணவர்கள் அவரது கார் மீது சரமாரியாக பட்டாசுகளை பற்ற வைத்து வீசினர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்தன. எனினும் ஆசிரியருக்கு காயம் ஏற்படவில்லை. போலீசார், மாணவர்களில் சிலரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman Srinivasan
மார் 27, 2025 11:40

வருங்கால கிரிமினல்கள். அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு இவர்களை தங்கள் கட்சியில் சேர்க்கவும்..


Sampath Kumar
மார் 27, 2025 11:05

படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற பேரு இப்படித்தான் வாங்கினார்கள் போல அதுக்கு இடைஞ்சல் பண்ணி வாத்தியாரு வாங்கி கட்டிக்கிட்டாரு


Keshavan.J
மார் 27, 2025 14:44

சம்பத்து அவர்களும் திராவிட இனத்தை சேர்த்தவர்கள் தான். . என்ன பொசுக்குன்னு உங்க ஆளுங்கள இப்படி கவுத்திட்டிங்க. இதை நீங்கள் சொல்லும் சங்கிகள் போடா வேண்டிய பதிவு.


அப்பாவி
மார் 27, 2025 10:24

அவிங்க என்ன காப்பியடிச்சு 90, 95 ந்னு வாங்கி கிழிச்சுறப் போறாங்களா? படிக்காம ஊர்சுத்தி, ஏதாவது 35 மார்க் வாங்கி பாஸ் பண்ண மாட்டோமான்னு செஞ்சிருக்காங்க. ஏதாவது ரிசர்வேஷன்ல பியூன் வேலை வாங்கி காலத்தை ஓட்டுவாங்க. இதைப் போய் பெருசு பண்ணிக்கிட்டு... வாத்தியாரை உட்டு ஏன் தடுக்கிறீங்க?


S.V.Srinivasan
மார் 27, 2025 09:01

படித்தவர்கள் அதிகமுள்ள கேரளா மாநிலம் என்று ஒரு காலத்தில் புகழ பட்ட கேரளாவிற்கு வந்த சோதனை. பெற்றோர்களின் வளர்ப்பு அப்படி.


நிக்கோல்தாம்சன்
மார் 27, 2025 07:53

நூறு சதவீத லிட்டரசி


வாய்மையே வெல்லும்
மார் 27, 2025 07:32

பினராயி விசயன் விழிபிதுங்கி நின்ற தருணம். என்னையா நடக்குது நாட்டிலேயே முதல் கல்வி அறிவு கிட்டிய எண்டே கேரளத்திலா இந்த கூற்று .. இருங்க .. நம்மூருல வேலைவெட்டி இல்லாம உலக்கை நாயகன் சும்மாதான் சுண்டல் சாப்பிட்டுட்டு ஊளை இடுகிறார். அவரை வைத்து கோடம்பாக்கத்தில் இந்த மைய கருத்தை? வைத்து ஒரு படம் எடுக்கலாம் என யோசிக்கும்..சின்ன பகவதி உரிமையில் நடக்கும் மூன் பிச்சர்ஸ்


சமீபத்திய செய்தி