உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்., தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

பாக்., தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தானின் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, காஷ்மீரில் பொது மக்கள் வசித்த பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்தது. அதேநேரத்தில் அந்த பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சேதம் ஏற்பட்டது. இந்த பகுதிகளை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேரில் சென்று பார்வையிட்டார்.இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: அந்தக் கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: சமீபத்தில் நான் ஜம்மு காஷ்மீரின் பூஞ்சிற்கு சென்று இருந்தேன். பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.இந்த கண்மூடித்தனமான தாக்குதல் அப்பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பலர், தங்களின் பல வருட கடின உழைப்பு ஒரே அடியில் வீணாகிவிட்டதாகக் கூறினர்.பூஞ்ச் ​​மற்றும் பிற எல்லைப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்த ஆழமான நெருக்கடியைக் கடந்து வரும்போது, ​​அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும்.பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் ​​மற்றும் பிற அனைத்து பகுதிகளுக்கும் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் தொகுப்பை வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

xyzabc
மே 30, 2025 01:44

காங்கிரஸ் கூட்டணி நண்பர் தி மு க களும் இந்த மானிய உதவி யை பகிர்ந்தால் இன்னும் நல்லா இருக்கும்.


Bhakt
மே 29, 2025 23:27

எந்த ஐரோப்பா ஆளோ ஏத்தின லோடை பாரதம் சுமக்கிறது.


ஆரூர் ரங்
மே 29, 2025 21:35

உங்க கூட்டணி ஆட்சியின் போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் இன அழிப்பால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஓடினர். உங்க கட்சி ரவுடிகளால் 9000 அப்பாவி சீக்கியர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.அவர்களுக்கு என்ன நிவாரணம் அளித்தீர்கள்?


ராமகிருஷ்ணன்
மே 29, 2025 21:21

நல்ல வேளை பாக்கிஸ்தானில், இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கேட்காமல் இருந்தாரே. அந்த வகையில் சந்தோஷம் தான்.


Ramesh Sargam
மே 29, 2025 21:16

ஒரேயொருதரம் எதிர்க்கட்சியினர் எல்லாம் சேர்ந்து தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தால் என்ன கெட்டா போகும்?


nagendhiran
மே 29, 2025 21:10

பப்பு எப்போதும், எதிலும், அரசியல்தான் செய்யறார்?


V Venkatachalam
மே 29, 2025 21:01

கான்-கிராஸ் சோனியா, பி.எம். ரிலீஃப் ஃபண்டில் இருந்து ஆர் ஜி எப் க்கு திருப்பி விட்ட பணத்தை திருப்பி கொடுத்து விட்டதா என்று உறுதியாக தெரியவில்லை. அந்த பணத்தை பி.எம் கேர்ஸ் ஃபண்டிற்கு இந்த சந்தர்ப்பத்தில் கொடுத்து விடலாம். ஆனால் அதை செய்யாமல் இந்த மாதிரி உருட்டுவானுங்க.


SENTHIL NATHAN
மே 29, 2025 20:43

கொரங்கிறாசுக்கு ஒட்டு போட்டால் இப்டிதாண் அடுத்தவனை காட்டுவாங்க


M S RAGHUNATHAN
மே 29, 2025 20:27

Mr Rahul, you earned an income of about Rs 150 crores in way of rent from properties of NH. Please distribute this income to the victims of the terror attack.


bogu
மே 29, 2025 20:21

நல்ல வேளை உங்க காலத்துல வாங்குன பீரங்கி எல்லாம் இப்ப இல்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை