உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் விமானத்தை என்ன செய்யலாம்: நாளை கேரளா வருகிறது பிரிட்டன் நிபுணர்கள் குழு!

போர் விமானத்தை என்ன செய்யலாம்: நாளை கேரளா வருகிறது பிரிட்டன் நிபுணர்கள் குழு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: பழுதான நிலையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பிரிட்டீஷ் கடற்படை போர் விமானத்தை, இங்கேயே வைத்து பராமரிப்பு பணியை செய்வதா அல்லது பிரிட்டன் கொண்டு செல்வதா என முடிவு செய்ய அந்நாட்டை சேர்ந்த பொறியாளர்கள் குழு நாளை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பிரிட்டன் கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ், அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 14ல் புறப்பட்ட எப்35 பி போர் விமானம், அரபிக்கடலில் கண்காணிப்பில் இருந்த போது எரிபொருள் பற்றாக்குறை பிரச்னை காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டது. அங்கு எரிபொருள் நிரப்பினாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. விமானத்தை பிரித்து கொண்டு செல்லலாமா என்பது கூட ஆலோசிக்கப்பட்டது.ரூ.640 கோடி மதிப்புள்ள போர் விமானம், கடந்த மூன்று வாரங்களாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. பிரச்னையை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முயன்றாலும் எதுவும் நடக்கவில்லை.இந்நிலையில், பிரிட்டன் நிபுணர்கள் குழு ஒன்று நாளை கேரளா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 25 பேர் கொண்டு இக்குழுவினர், விமானத்தை முழுமையாக ஆய்வு செய்ய உள்ளதுடன், அதனை இந்தியாவிலேயே சரி செய்ய முடியுமா அல்லது பிரிட்டன் கொண்டு சென்று சரி செய்வதா என முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தை சரி செய்வதற்கான முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை இந்தியா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தாமரை மலர்கிறது
ஜூலை 06, 2025 02:44

பேரிச்சம்பழம். ஒரு f35 க்கு முப்பத்தைந்து பேரிச்சம்பழம்.


Svs Yaadum oore
ஜூலை 05, 2025 22:35

இது இந்தியாவை உளவு பார்க்க வந்த விமானம் ....இந்திய எல்லை அருகே வரவும் இந்தியா விமான படை வான்வெளி பாதுகாப்பு ரேடார் மூலம் இந்த பிரிட்டிஷ் விமானம் மென்பொருள் லாக் செய்யப்பட்டு தரை இற க்கப்பட்டது ....இதை சரி செய்ய பிரிட்டிஷ் கடற்படை பொறியாளர்கள் முடியாமல் இந்த விமானம் தயாரித்த அமெரிக்க LOCKHEED நிறுவனம் வருகை .....மென்பொருள் லாக் செய்யப்பட்டு விமானத்தை நகர்த்தி அப்படியே எடுத்து செல்லக்கூட முடியாதாம் ...தனி தனியாக கழட்டி காயலான் கடையில் பேரீச்சம் பழம் வாங்கி செல்லலாம் ....


Ramesh Sargam
ஜூலை 05, 2025 22:14

ஒரு பெரிய சரக்கு விமானத்தில் எடுத்து செல்லலாம். அல்லது பார்ட் பார்டாக பிரித்து எடுத்துக்கொண்டு செல்லலாம். அல்லது திருவனந்தபுரத்திலேயே எங்காவது கண்காட்சி பொருளாக வைக்கலாம். வருமானம் கிடைக்கும்.


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 22:05

சென்னையில் முன்பு ஒரு கப்பல் கடற்கரை அருகில் தரைதட்டி நின்ற போது சு‌ற்றுலா தலம் போல ஆனது. டிக்கட் போட்டு வசூலிக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை