உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரெப்போ வட்டி குறைப்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்; வல்லுநர்கள் கருத்து

ரெப்போ வட்டி குறைப்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்; வல்லுநர்கள் கருத்து

புதுடில்லி: ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து உள்ளது, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து கூறி உள்ளனர். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவுகள் எடுக்கும். அதன் படி பிப்.5ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. புதிய கவர்னரான சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கூட்டத்தின் கடைசி மற்றும் 3ம் நாளான இன்று (பிப்.7) ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6.25 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைப்பு குறித்து பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி கூறியிருப்பதாவது; ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கம். ரிசர்வ் வங்கியின் இந்த அணுகு முறையானது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கும் இடையேயான சமநிலையை பிரதிபலிக்கிறது. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நுகர்வு அதிகரிப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்து, உள்நாட்டு தேவையை அதிகரிக்கும். பண பற்றாக்குறையிலிருந்து பாதுகாப்பும் அளிப்பதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். எம்.கே. குளோபல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவன தலைமை பொருளாதார நிபுணர் மாதவி அரோரா கூறுகையில்' வட்டி விகித குறைப்பு என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. உலகளாவிய சூழலை கருத்தில் கொண்டு, இது போன்ற மேலும் சில தொடர்பு நடவடிக்கைகள் வர வாய்ப்புள்ளது' என்றார்.'கிரிஸில்' நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் தர்மாதிகாரி ஜோஷி கூறுகையில், ''டிரம்ப் அரசின் வர்த்தக கொள்கைகள் உலகச்சந்தைகளை ஆட்டிப்படைக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் பணத்தை இப்படித்தான் பயன்படுத்தும். எனினும் எதிர்காலத்தில் வட்டி விகித குறைப்பு என்பது உள்நாட்டு பண வீக்கத்தை பொறுத்தே அமையும்,'' என்றார்.அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீன் கந்தேல்வால் கூறுகையில்,' வட்டி விகிதம் குறைப்பு வீடு மற்றும் வணிக கடன்கள் பெறுவோருக்கு நிவாரணமாக அமையும். இது சந்தை பணப்புழக்கத்தை அதிகரித்து, வணிக முதலீடுகளை ஊக்குவிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMAKRISHNAN NATESAN
பிப் 07, 2025 21:21

சேமிப்புப் பழக்கத்தைக் குறைத்து நுகர்வுக் கலாச்சாரத்தை அதிகரிக்கும் போக்கு இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒத்து வருமா ??


தாமரை மலர்கிறது
பிப் 07, 2025 21:08

ஜிஎஸ்டி யை அதிகரித்து, வட்டியை குறைத்து, கார்ப்பரேட் வரியை அகற்றினால், இந்தியாவின் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் பறக்கும்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 07, 2025 19:37

ஜிஎஸ்டி வரியை குறைத்தால், நெடுஞ்சாலை சுங்கவரியை எடுத்தால், வரி ஆன்ட்டியை துரத்திவிட்டு ஒரு புத்திசாலியை மந்திரியாக போட்டால், பாஜக ஒன்றிய அரசை விரட்டினால், இந்திய பொருளாதாரம் மறுபடியும் மூச்சு விடும்.


Prabu Ragu Raman
பிப் 07, 2025 18:49

ரெபோ ரேட் குறைப்பு பண வீக்கத்தை அதிக படுத்தும். ரூபாய் மதிப்பு இன்னும் குறையும். தங்கம் விலை அதிகம் ஆகும். பெட்ரோல், டீசல் விலை அதிகம் ஆகும். இறக்குமதி பொருட்கள் விலை அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது நற்செய்தி. இந்தியர்களுக்கு தொலைநோக்கில் பயன் தராது.


Bye Pass
பிப் 07, 2025 20:16

அமெரிக்காவில் செட்டில் ஆயிடுங்க


l.ramachandran
பிப் 07, 2025 21:31

கரெக்ட் தான். பட்ஜெட்னாலே ஒரு பக்கம் குடுக்கறாமாதிரி குடுத்து இன்னொரு பக்கம் எடுத்துக்கறதுதான். இதுதான் மோடி மஸ்தான் விளையாட்டு.


V.Mohan
பிப் 07, 2025 17:59

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட் மற்றும் ரெபோ ரேட் குறைப்பு அரசின் பாசிடிவ் சமிக்ஞையாக உள்ளது. ராகுல் கும்பலின் எதிர்மறை கருத்துக்களுக்கு மதிப்பு தராமல் மக்கள் இவற்றினால் பலன் அடைய வாய்ப்புள்ளது என்பதை நம்பவேண்டும். வங்கிகளும் இந்த முடிவுகளுக்கு நேர்மறையான ஆதரவு அளித்து மக்களின் சொந்த வீட்டு கனவுகளுக்கு உதவவேண்டும். அனைத்து தரபாபினரும் இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை