உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நக்சல்களை சரண் அடைய சொல்லுங்கள் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கோரிக்கை

நக்சல்களை சரண் அடைய சொல்லுங்கள் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு கோரிக்கை

பெங்களூரு: ''நக்சல்களை அரசிடம் சரண் அடைய சொல்லுங்கள்,'' என்று, முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கோரிக்கை விடுத்து உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:'மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து, கஸ்துாரி ரங்கன் அறிக்கையை அமல்படுத்துவதற்கு எதிராக இருந்ததால், நக்சல் விக்ரம் கவுடா என்கவுன்டர் செய்யப்பட்டார்' என்று, சில முற்போக்கு சிந்தனையாளர்கள் விமர்சித்து உள்ளனர். இதில் உண்மை இல்லை. நான் முற்போக்கு சிந்தனையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நக்சல்களை தயவு செய்து, அரசிடம் சரண் அடைய சொல்லுங்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை சீரமைக்க, உங்கள் தரப்பில் இருந்தும் உதவு செய்யுங்கள்.

கண்காணிப்பு

துமகூரின் பாவகடாவில் நக்சல்கள், பல போலீசாரை கொன்றனர். அப்போது நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை. நக்சல்களுடன் அரசு தரப்பில் நடந்த பேச்சுக்கு பின், பல நக்சல்கள் மனம் மாறி சரண் அடைந்தனர். நக்சல் தலைவர் விக்ரம் கவுடாவை, நாங்கள் போலி என்கவுன்டர் செய்யவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக அவரது செயல்பாடுகள், கண்காணிக்கப்பட்டு வந்தது. அவர் போராட்டங்களில் பங்கேற்றது, மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டது என்று அனைத்தும் கண்காணிக்கப்பட்டது. அவர் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. உரிமம் இல்லாமல் அவர் துப்பாக்கி பயன்படுத்தி வந்தார். கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் தற்போது இடைக்கால ஜாமினில் உள்ளார். வழக்கிற்கு தேவையான கூடுதல் ஆதாரங்களை சேகரித்து, இன்னொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மறுவாழ்வு

விக்ரம் கவுடா என்கவுன்டர் குறித்து, கர்நாடக உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி கூறியதாவது:நக்சல் விக்ரம் கவுடா என்கவுன்டர் தொடர்பாக, ஹெப்ரி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. விக்ரம் கவுடா குழுவுக்கும், நக்சல் ஒழிப்பு படைக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடந்த போது இருட்டாக இருந்தது. சரண் அடையும்படி பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை. இதனால் என்கவுன்டர் நடந்தது. இது போலி என்கவுன்டர் என்று சிலர் வதந்தி பரப்புகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டும். விக்ரம் கவுடா பயன்படுத்திய 9 மி.மீ., கார்பைன் துப்பாக்கி, கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் அவர் எதற்காக வந்தார் என்று எங்களிடம் தகவல் இல்லை. குடகு, சிக்கமகளூரில் நக்சல் நடமாட்டம் இருப்பது பற்றி, இந்த ஆண்டு மார்ச் மாதமே எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் நக்சல்களை தேடி வந்தோம். வெளிமாநில நக்சல்கள் இங்கு பதுங்கி இருப்பது பற்றி எந்த தகவலும் இல்லை.கேரள போலீசார், நமது மாநில நக்சல் ஒழிப்பு படையினர் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர். சரண் அடையும் நக்சல்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை அரசு அறிவித்து உள்ளது. நக்சல்கள் சரண் அடைய நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். இதனால் சரண் அடைவதை தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
நவ 22, 2024 15:56

கம்யூனிஸ்டுக்கள் விதேராசி பற்றுள்ளவர்கள். அவர்களுக்காக உழைக்கும் அடிமைய்யகள். இஙகு ஒருத்தன் மேலே இப்படி அப்படி பார்த்து பேசுவான். மக்களை நேரே பார்த்து பேசினால் புளுக தள்ள வராது


M Ramachandran
நவ 22, 2024 15:53

அது அவர்கள் கைய்யி இல்லையய உசுப்பேத்த தான் முடியும். கம்யூனிஸ்டுகள் நாட்டின் அடுத்த தீவிர வாதிகள்


முக்கிய வீடியோ