உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டின் பாதுகாப்பு சார்ந்த செய்தி வெளியிடுவதில் பொறுப்பு தேவை: மீடியாக்களுக்கு மத்திய அரசு அறிவுரை

நாட்டின் பாதுகாப்பு சார்ந்த செய்தி வெளியிடுவதில் பொறுப்பு தேவை: மீடியாக்களுக்கு மத்திய அரசு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் பாதுகாப்பு மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக செய்தி வெளியிடும் போது மீடியாக்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:*நாட்டின் நலன் கருதி, அனைத்து மீடியாக்கள், செய்தி ஏஜென்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும் போது, பொறுப்புடனும் மற்றும் தற்போதுள்ள சட்டம் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.*பாதுகாப்பு நடவடிக்கைகள் அல்லது செயல்பாடு தொடர்பாக, ' Sources-based' தகவல்கள் அடிப்படையாக கொண்டு நேரடி ஒளிபரப்பு செய்வதோ, காட்சிபடுத்துதல் அல்லது செய்தி வெளியிடக்கூடாது. முன்கூட்டியே தகவல்களை வெளியிடுவது என்பது, எதிரிகளுக்கு உதவக்கூடும். *கார்கில் போர், மும்பை பயங்கரவாத தாக்குதல், காந்தகாருக்கு விமானம் கடத்தலின் போது, கட்டுப்பாடு இல்லாமல் செய்தியாக்கப்பட்டது, நாட்டு நலன்கள் மீது எதிர்பாராத விதமான பாதக விளைவுகளை ஏற்படுத்தியது.*நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில், மீடியாக்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தனி நபர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.*சட்டப்பூர்வ கடமைகளை தவிர, நமது கூட்டு நடவடிக்கைகள் தொடர்ச்சியான செயல்பாடுகளையோ அல்லது நமது பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பையோ சமரசம் செய்யப்படாமல் இருக்க செய்வது நமது கடமை. *பயங்கரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என ஏற்கனவே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதனை மீறி செயல்படுவது நடவடிக்கை எடுக்க வகை செய்யும். எனவே, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, நாட்டின் நலன் கருதி மீடியாக்கள் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகள் முடிந்தவுடன், அரசு நியமிக்கும் அதிகாரி விளக்கம் அளிப்பார்.*சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கவனமுடனும், பொறுப்புடனும் செய்தி வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

கல்யாணராமன்
ஏப் 26, 2025 22:25

பாகிஸ்தானுடன் போர் செய்யும் சூழ்நிலை வந்தால் இந்திராகாந்தி பார்முலாவை செயல்படுத்த வேண்டும். மாநில அரசுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி செயல்படுத்த வேண்டும். மீடியாக்கள், செய்தி தாள்கள் சென்சார் செய்யப்பட வேண்டும். முகநூல், எக்ஸ் தளங்கள் முடக்கப்பட வேண்டும். மிசா சட்டம் அமல்படுத்தி தேச விரோதிகளை விசாரணை இன்றி சிறையில் அடைக்க வேண்டும்.


கல்யாணராமன்
ஏப் 26, 2025 22:21

மீடியாக்கள் சென்சார் செய்யப்பட வேண்டும்


ManiK
ஏப் 26, 2025 21:36

பெரும்பாலான இந்திய ஊடகங்கள் இன்னும் பரபரப்பை நோக்கி மட்டுமே வேலை செய்கின்றன. பொறுப்பு மற்றும் பொறுமை இல்லாமல் அந்த தீவிரவாதிகளின் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று சொந்தங்களை தியாகிகள் போல் பேட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும்.


Karthik
ஏப் 26, 2025 22:24

சரியாக சொன்னீர்கள். அவர்கள் தியாகியும் அல்ல, தியாகிகளின் வாரிசும் அல்ல , தியாகியின் குடும்ப வாரிசும் அல்ல. எனவே அவர்களிடம் பேட்டி எடுக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. மேலும் ஊடகங்கள் இவ்விஷயத்தில்மிக கவனமாக செயல்பட வேண்டும்.


thehindu
ஏப் 26, 2025 21:03

மோடிக்கு காவடி தூக்கும் வட இந்திய மீடியாக்கள் போர்க்களத்தையே நேரடி வர்ணனை நாள்கணக்காக செய்யும்போது ஊக்குவித்த அரசு தோல்வியை மட்டும் ஒளிபரப்பக்கூடாதா ?


Mr Krish Tamilnadu
ஏப் 26, 2025 20:28

முற்றிலும் உண்மை. அரசின் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே வெளியீடுவது, நமது நெடுநாள் பிரச்சினைக்காக கைகோர்த்து நிற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். உலக ஊடகங்களுக்கு இந்திய செய்திகளை அனுப்புவர்களுக்கும் இந்த கட்டுபாடு விதிக்க வேண்டும். இந்திய உணர்வோடு அமைதி காப்போம்.


GMM
ஏப் 26, 2025 20:06

நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் மீடியா அரசின் தகவல் தொடர்பு துறை மூலம் பெற்று மட்டும் வெளியிட வேண்டும். சிறிது அரசியல் இருக்கலாம் . உண்மையை பின்பு வெளி கொண்டுவர முடியும். பொறுப்பற்ற மீடியாக்கள் மீது எடுக்க போகும் நடவடிக்கை பற்றி அரசு மக்கள் ஆதரவு பெற வெளியிட வேண்டும். முன் அனுமதி பெறாமல், உரிய கட்டணம் செலுத்தாமல் படம் பிடிப்பது, நேரடியாக ஒளிபரப்புவது , சட்டத்தில் இடம் இல்லை. ? வருவாய், பொது பணி விதியில் உள்ளது.


Velan Iyengaar
ஏப் 26, 2025 19:43

அதாவது அர்னாப் என்னும் வடிகட்டிய சங்கி ஊதுகுழலான ரிபப்லிக் டிவி நேரலையில் ஒரு மேஜர் ஜெனரல் கையால் ராணுவத்தில் ஆள்சேர்ப்பு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்று விவரித்து பேசியபோது உண்ட கட்டிவாங்கிக்கொண்ட போது நடந்த நிகழ்ச்சியை பார்த்து தான் இந்த அறிவுரை


Velan Iyengaar
ஏப் 26, 2025 19:41

யாரும் இல்லாத ரோட்டில் ரெண்டு பக்கமும் கையை அசைத்துக்கொண்டு ஜீப்பில் செல்லும் காட்சியை வெளியிடும்போது மட்டும் அந்த பொறுப்பு குறித்து பேசமாட்டார்கள்


N Sasikumar Yadhav
ஏப் 26, 2025 19:16

பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கும் தமிழக ஊடகம் அனைத்தையும் இரண்டு மாதத்துக்கு தடைசெய்ய வேண்டும்.முக்கியமாக கருநாநிதி குடும்ப ஊடகம் அனைத்தும்.


நாகா
ஏப் 26, 2025 20:22

அப்படிபட்ட அலைவரிசையை தடைசெய்யவேண்டும்.


புதிய வீடியோ