மேலும் செய்திகள்
கிராம செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
29-Nov-2024
பாலக்காடு; கோவில் உற்சவ விழாவில் யானைகள் அணிவகுப்பு மற்றும் பட்டாசுகள் வெடிப்பதில் அரசு ஏற்படுத்திய கட்டுப்பாட்டுகளுக்கு எதிராக பாலக்காட்டில் நேற்று கண்டன ஆர்பாட்டம் நடந்தது.பாலக்காடு மாவட்ட, கோவில் பட்டாசு பாதுகாப்பு குழு சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை, பாலக்காடு எம்.எல்.ஏ., ராகுல் மாங்கூட்டம் துவக்கி வைத்தார்.மாவட்ட பட்டாசு பாதுகாப்பு குழு தலைவர் சசிதரன் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் பஞ்ச வாத்தியம், செண்டை மேளம் மற்றும் யானைகளின் ஆடை ஆபரணங்கள் அலங்கரித்த (நெற்றி பட்டம், முத்துமணி குடை) ஐந்து ஆட்டோக்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.முன்னதாக, கோட்டை மைதானம் ஐந்து விளக்கு பகுதியில் இருந்து கண்டன ஆர்ப்பாட்ட பேரணி துவங்கியது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட உற்சவ விழா ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
29-Nov-2024