உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஆன்லைன் மோசடியில் ரூ.8 கோடி இழந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., தற்கொலை முயற்சி

 ஆன்லைன் மோசடியில் ரூ.8 கோடி இழந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., தற்கொலை முயற்சி

பாட்டியாலா: பஞ்சாபில், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், ஆன்லைனில் 8.10 கோடி ரூபாயை இழந்த நிலையில், தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத் துவமனையில் சிகிச் சை பெற்று வருகிறார். பணம் முதலீடு பஞ்சாபின் பாட்டியாலாவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி அமர் சிங் சாஹல். இவர், ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட போலி நிதி நிறுவனத்தில், தொடர்ந்து பணம் முதலீடு செய்து வந்தார். இந்நிலையில், தன் வீட்டில் துப்பாக்கியால் சுட்டு நேற்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் உள்ள அமர் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவரது அறையில் இருந்து, 16 பக்கங்கள் அடங்கிய தற்கொலை குறிப்பு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் கூறியுள்ளதாவது: 'வாட்ஸாப்' வாயிலாக துவங்கப்பட்ட நிதி நிறுவனத்தில் சில ஆண்டுகளுக்கு முன் முதலீடு செய்தேன். கூடுதல் கட்டணம் தனியார் வங்கியின் பெயரில் நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதில், பலமுறை முதலீடு செய்தேன். என்னைப் போல் பலரும் அந்த நிறுவனத்தில் இணைந்து பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். பணம் மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி எடுக்க முயன்றேன். அதற்கான நடைமுறையின்போது, கூடுதல் கட்டணம் செலுத்த சொல்லி அந்த நிறுவனத்தினர் அழுத்தம் தந்தனர். அடுத்தடுத்து என, 8.10 கோடி ரூபாய் வரை செலுத்தியும், முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியவில்லை. அதன்பின்னரே, இது மோசடி என்பதை அறிந்தேன். வீட்டில் இருந்தவர்களுக்கு கூட தெரியாமல், அந்த மோசடி நிறுவனத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தேன். பணத்தை திரும்ப பெற முடியாதது மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, நான் தற்கொலை செய்து கொள்கிறேன். வீட்டில் உள்ள உறவினர்கள் என்னை மன்னிப்பர் என நம்புகிறேன். நடவடிக்கை என் தற்கொலைக்கு, மோசடி நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் காரணமில்லை. அவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vee srikanth
டிச 24, 2025 16:09

பஞ்சாபில் கஞ்சா அதிகம் கிடைக்கும்


kumar s
டிச 23, 2025 09:32

Indha Maadhiri thathigal Eppadi UPSC CSE clear seidhaargalo?


R.RAMACHANDRAN
டிச 23, 2025 08:39

இவர் கோடிக்கணக்கான ரூபாய் எப்படி சம்பாதித்தார்.பிறர் அழ அழ சேர்த்த செல்வம் தான் அழ அழ பறிபோகும் என்பது பழ மொழி.


VENKATASUBRAMANIAN
டிச 23, 2025 08:20

படித்தவன் பாட்டைக்கெடுத்தான். அதிக ஆசை. பேராசை பெரும் நஷ்டம்


முக்கிய வீடியோ