உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடிச்ச கொள்ளையில் 500 கோடி ரூபாயை கொடுங்க; முன்னாள் அமைச்சரை கேட்கிறார் இந்நாள் முதல்வர்!

அடிச்ச கொள்ளையில் 500 கோடி ரூபாயை கொடுங்க; முன்னாள் அமைச்சரை கேட்கிறார் இந்நாள் முதல்வர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: 'முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சி, மக்களிடம் கொள்ளையடித்து 1500 கோடி ரூபாயை வங்கியில் குவித்து வைத்துள்ளது. இதில் மாநில மக்களுக்காக, ரூ.500 கோடியை தர வேண்டும்' என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: பாரத ராஷ்டிர சமிதி கட்சியினர் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ளனர். சந்திரசேகர ராவ் கட்சி ரூ.1,500 கோடிக்கு வங்கிகளில் குவித்து வைத்துள்ளது. மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அந்த பணத்தில் ரூ.500 கோடியை தர வேண்டும்.அந்த பணம் கஷ்டப்பட்ட மக்களிடம் சென்று சேருவதை, நாங்கள் உறுதி செய்வோம். பி.ஆர்.எஸ்., கட்சி தலைவர் கே.டி.ராமராவுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில், ஒரு பகுதியை இந்திரா அம்மா வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்திற்கு நன்கொடையாக அளிக்க வேண்டும். கஜ்வேலில் கே.சி.ஆருக்கு சொந்தமான 100 ஏக்கர் பண்ணை வீடு உள்ளது.மக்கள் நலனில் உண்மையான அக்கறை இருந்தால் அதில் 50 ஏக்கரை தானமாக கொடுங்கள். பொதுமக்களுக்கு வீடுகள் கட்டித் தருவது எனது பொறுப்பு. ஜனவாடாவில் உங்களுக்கு (கே.டி.ஆர்.,) 50 ஏக்கர் நிலம் உள்ளது. பொதுமக்களுக்கு 25 ஏக்கர் ஒதுக்குங்கள், நாங்கள் ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவதற்கு அந்த நிலத்தை பயன்படுத்துவோம். இவையெல்லாம் நீங்கள் பொதுமக்களிடம் இருந்து கொள்ளையடித்தவைகளே தவிர, உங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமானவை அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

கே.டி.ஆர்., பதிலடி

இதற்கு பதிலளித்து முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்.,) மகன் கே.டி.ராமராவ் (கே.டி.ஆர்.,) கூறுகையில், 'முதலில் ஏழைகளின் வீடுகளை புல்டோசர் நடவடிக்கை மூலம் இடித்து, அவர்களின் வாழ்க்கையை அழிப்பதை நிறுத்துங்கள். ரேவந்த் ரெட்டி துர்கம்செருவில் அமைந்துள்ள தனது சகோதரர் திருப்பதி ரெட்டியின் வீட்டையும், கோடங்கலில் உள்ள தனது சொந்த வீட்டையும் முதலில் இடிக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

theruvasagan
அக் 06, 2024 20:32

கொள்ளையடிச்ச பணத்துல மூணுல ஒரு பங்கு மக்களுக்கு. மீதி நம்மளுக்கு. இந்த விளையாட்டை ரெண்டு பேரும் மாறி மாறி விளையாடுவோம். டீல் ஓகேவா.


தீனதயாளன்
அக் 06, 2024 17:43

பலே. அடிச்ச 1500 கோடில 500 கோடி திருப்பி குடுத்து மீதி 1000 கோடியை அவிங்களே வெச்சுக்கலாமா? இது 33 பர்சண்ட்தான். இங்கே 40 பர்சண்ட்ல கேக்குறாங்க.


நிக்கோல்தாம்சன்
அக் 06, 2024 17:13

நடுவில் இருவர் கொள்ளை அடித்ததையும் பொதுமக்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டு பார்த்துக்கொண்டுள்ளனர்


Anantharaman Srinivasan
அக் 06, 2024 14:00

அவன் அடித்த கொள்ளையை இவன் சொல்வான். இவன் அடித்த கொள்ளையை அவன் சொல்வான். மொத்தத்தில் கொள்ளை .amount வெளியில் வரும். ஒரு பைசா வெளியில் வராது.


Ramesh Sargam
அக் 06, 2024 13:46

அப்ப மீதி ஆயிரம் கோடியை அவர்களே வைத்துக்கொள்ளலாமா? கொள்ளையடித்தபனம் எல்லாம் மீட்கப்பட்டு, மக்கள் நலனுக்காக பயன்படுத்துவது நல்லது.


RAAJ68
அக் 06, 2024 12:49

இஞ்சி கொள்ளை இல்லை. 2 ஜி கொள்ளை என்று படியுங்கள்.


Kumar Kumzi
அக் 06, 2024 12:00

இங்க ஒரு திருடன் முப்பதாயிரம் கோடிய முழுங்கிட்டு துணைவர்னு நாற்காலியில் கம்முனு இருக்கான்யா


ஆரூர் ரங்
அக் 06, 2024 11:54

ரேவந்தண்ணா இதையே ராபர்ட் வாட்ரா கிட்ட கேட்கலாமே.


Sridhar
அக் 06, 2024 11:19

அதுலகூட அரசியல்வாதிகளுக்கிடையே என்ன ஒரு கரிசனம் பாருங்க. கொள்ளையில மூன்றில் ஒரூ பகுதி கொடுத்தா போதும்ன்றாங்க ஏண்டா கொள்ளையடிச்ச, முழுத்தொகையையும் அபராததோட மக்களுக்கு திருப்பிக்கொடுன்னு கேக்கல பாருங்க. என்னதான் இருந்தாலும் தொழில் பங்காளிகள் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுப்பாங்களா?


vijai
அக் 06, 2024 10:45

மற்ற மாநிலங்கள் எல்லாம் பரவால்ல முதல்வர் பெயர் கட்சிகள் மாறிக்கொண்டே இருக்கிறது ஆனால் நம் தமிழ்நாட்டில் தலைஎழுத்து திராவிட கட்சிகள் தான் ஒரே குடும்பத்தின் பெயர்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை