உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.2.7 கோடி தராததால் பீஹார் தேர்தலில் எம்எல்ஏ சீட் தரவில்லை: லாலு வீடு முன் சட்டையை கிழித்து கதறியழுத பிரமுகர்

ரூ.2.7 கோடி தராததால் பீஹார் தேர்தலில் எம்எல்ஏ சீட் தரவில்லை: லாலு வீடு முன் சட்டையை கிழித்து கதறியழுத பிரமுகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: எம்எல்ஏ சீட்டுக்கு ரூ.2.7 கோடி கேட்டனர். அந்த பணத்தை தராததால் எனக்கு சீட் தரவில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் முக்கிய பிரமுகர் லாலு வீடு முன்பு கதறி அழுதார். பீ'ஹார் சட்டசபை தேர்தல் பிரசாரங்கள் களைகட்டி உள்ளன. அதே நேரத்தில் எம்எல்ஏ சீட் கிடைக்காத பலரும் தத்தம் கட்சி தலைமை மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் லாலு கட்சியில் திடீர் புகைச்சலாக எம்எல்ஏ சீட் வேண்டும் என்றால் ரூ.2.7 கோடி கேட்டனர். அதை தராததால் வேறு ஒருவருக்கு எம்எல்ஏ சீட் தரப்பட்டதாக அக்கட்சியின் முக்கிய பிரமுகர் மதன் ஷா என்பவர், லாலு பிரசாத் வீட்டின் முன்பு திரண்டு சட்டையை கிழித்து அதிருப்தி வெளிப்படுத்தினார்.பின்னர் தரையில் விழுந்து அழுது அரற்றினார். அங்கு அழுதபடியே பேசிய அவர், தேர்தலில் போட்டியிட கட்சி தலைமையிடம் நான் சீட் கேட்டேன். உங்களுக்கு சீட் தருவோம் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் சீட்டுக்காக ரூ.2.7 கோடி தர வேண்டும் என்றனர். இந்த பணத்தை கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் யாதவ் (தற்போது ராஷ்ட்ரீய ஜனதா தள ராஜ்யசபா எம்பியாக உள்ளார்) கேட்டார். நான் பணம் தர மறுத்தேன். இப்போது அந்த தொகுதியை வேறு ஒருவருக்கு கொடுத்து இருக்கின்றனர்.கட்சிக்காக 1990ம் ஆண்டில் இருந்து கடுமையாக உழைத்திருக்கிறேன். என் நிலத்தை கூட விற்றிருக்கிறேன். இப்போது எம்எல்ஏ சீட்டை பணத்திற்காக விற்றுள்ளனர். என்னை போன்ற கடும் உழைப்பாளிகளை கட்சி ஒதுக்கிவிட்டு, வசதியானவர்களை முன்னிறுத்துகின்றனர். அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று மதன் ஷா கூறினார்.சீட் கிடைக்காமல் ஏமாற்றியதாக கட்சி தலைமை மீது புகார் கூறி அழுத மதன் ஷாவை, அங்கிருந்த ஆர்ஜேடி தொண்டர்கள் அகற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை