மழைக்காலத்துக்குள் சாலைகள் சீரமைப்பு
புதுடில்லி:“மழைக் காலத்துக்கு முன்பே சாலைகள் சீரமைக்கப்படும்,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.மதுபன் சவுக் முதல் முகர்பா சவுக் வரையிலான வெளிப்புற ரிங் ரோட்டை, முதல்வர் ரேகா குப்தா, நேற்று முன் தினம் நள்ளிரவு ஆய்வு செய்தார். அப்போது, நிருபர்களிடம் ரேகா கூறியதாவது:பொது வசதிக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மழைக் காலத்துக்கு முன்பே டில்லி மாநகரின் அனைத்து சாலைகளும் குழிகள் இல்லாத சாலைகளாக சீரமைக்கப்படும்.தலைநகர் டில்லியில் சாலைகளை மேம்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மதுபன் சவுக் முதல் முகர்பா சவுக் வரை 4 கி.மீ.,க்கான சாலை சர்வதேச தரத்தில் அமைகிறது. இந்தப் பணியை பொதுப்பணித்துறை வடக்கு மண்டல அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்தச் சாலைக்கு 12.85 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இரவில் வாகன ஓட்டிகளுக்கு பார்வைத் திறனுக்கு வசதியாக, 'தெர்மோ பிளாஸ்டிக் பெயின்ட்' பளபளப்பான 'ஸ்டுட்'கள் மற்றும் மீடியன் மார்க்கர்கள் நிறுவப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.