ஆரோசிட்டி ரயில் நிலையம் வழியாக சாலை, ஏர்போர்ட்டுக்கு செல்லலாம்
புதுடில்லி:டில்லியில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ள, ஆரோசிட்டி ரயில் நிலையத்திலிருந்து ரயில், சாலை மற்றும் விமான நிலையங்களுக்கு எளிதில் செல்ல முடியும். அந்த வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த ரயில் நிலையம், நாட்டின் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் என கூறப்பட்டுள்ளது. டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே அமைந்துள்ள ஆரோசிட்டி ரயில் நிலையத்திலிருந்து, விமானங்கள், மெட்ரோ ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் செமி ஹைஸ்பீடு ரயில் நிலையத்திற்கு செல்ல முடியும். 106 கி.மீ., என்.சி.ஆர்.டி.சி., எனும் நேஷனல் கேபிடல் ரீஜின் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனால் செயல்படுத்தப்பட உள்ள இந்த புதிய திட்டத்தில், 106 கி.மீ.,க்கு 16 முக்கிய ரயில் நிலையங்கள் இடம்பெறும். இந்த திட்டம் செயல்படுத்தப்படுமானால் காசியாபாத், நொய்டா, டில்லி, மனோசர் மற்றும் பிற என்.சி.ஆர்., எனும் நேஷனல் கேபிடல் பகுதிகளில் இருந்து, பிற நகரங்களுக்கு எளிதாக செல்ல முடியும். இந்த நகரங்களுக்கான போக்குவரத்து நேரம் வெகுவாக குறையும். அதுபோல, என்.சி.ஆர்., பகுதியில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கும் எளிதாக சென்றடைய முடியும். டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே அமைய உள்ள ஏரோசிட்டி ரயில் நிலையத்திலிருந்து, நமோ பாரத் எனும் ஹைஸ்பீடு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த வழித்தடம் டில்லி - குருகிராம் - ஷஹரான்பூர் - நீம்ராணா - பெஹ்ரோர் நமோ பாரத் ரயில் வழித்தடத்தில் முக்கிய பங்காற்றும். சுரங்கம் இந்த புதிய ரயில்வே திட்டத்தின் கீழ், மொத்த வழித்தட துாரத்தில், 71 கி.மீ.,க்கு உயர் மட்டத்திலும், 35 கி.மீ., துாரம் சுரங்கத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இது, டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் படி, முக்கிய வழித்தடமாக அமையும். இந்த வழித்தடத்தின், 17 கி.மீ., ஷாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ வழித்தடத்தை, பிரதமர் மோடி, கடந்த, 2023 அக்டோபரில் துவக்கி வைத்தார். அந்த வழித்தடத்தில் இன்னும் பணிகள் முடிவடையாமல், இறுதி கட்ட ஒப்புதல் பெறும் நிலையில், இந்த முக்கிய ரயில் திட்டத்தின் ஒரு பகுதிகள் உள்ளன.