உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தல் முடிவு தந்த பாடம்: அரசியல், குடும்பம் இரண்டுக்கும் குட்பை சொன்ன லாலு வாரிசு

பீஹார் தேர்தல் முடிவு தந்த பாடம்: அரசியல், குடும்பம் இரண்டுக்கும் குட்பை சொன்ன லாலு வாரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அரசியலில் இருந்து விலகுவதாக லாலுவின் மகளும், கட்சியின் நிர்வாகியுமான ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.பீஹார் தேர்தல் படுதோல்வி எதிர்க்கட்சிகளை கலகலக்க வைத்துள்ளது. குறிப்பாக ராஷ்டிரிய ஜனதா தளத்தில் பல்வேறு முணுமுணுப்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. தோல்விக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்ற கேள்விகள் எழுந்த நிலையில், அனைத்து பழிகளையும் ஏற்றுக் கொள்வதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது; நான் அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையும் துறக்கிறேன். சஞ்சய் யாதவ், ரமீசும் இதைச் செய்ய சொன்னார்கள். அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் தமது பதிவில் கூறி உள்ளார். ரோகிணி ஆச்சார்யா யார்? பீஹார் முன்னாள் முதல்வர், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவுக்கு மொத்தம் 9 வாரிசுகள். அவர்களில் 7 பேர் மகள்கள். இரண்டு மகன்கள். இவர்களில் 2வது மகள் தான் ரோகிணி ஆச்சார்யா. அடிப்படையில் இவர் ஒரு தொழில்முறை மருத்துவர். 2022ம் ஆண்டில் தந்தை லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது தந்தைக்காக ரோகிணி ஆச்சார்யா தமது சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். லாலுவின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ்பிரதாப் யாதவ் இருவரும் அரசியலில் உள்ள சூழலில், ரோகிணியும் அரசியலில் குதித்தார். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சரண் தொகுதி எம்பி வேட்பாளராக போட்டியிட்டு, பாஜவின் மூத்த தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடியிடம் தோல்வி அடைந்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்