UPDATED : மே 07, 2025 10:13 PM | ADDED : மே 07, 2025 07:44 PM
மும்பை: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் ஷர்மா அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு, இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l8gwxhiw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதைத் தொடர்ந்து, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் மட்டும் கேப்டனாக விளையாடி வந்தார். ஆனால், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி இழந்தது. இந்தத் தொடர்களில் ரோகித் ஷர்மாவின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணம் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனிடையே, அடுத்த மாதம் நடக்கும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர். அதில், ரோகித் ஷர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ரோகித் ஷர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.