உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அடுத்த ஆண்டிற்குள் ரோப் வே சேவை

அடுத்த ஆண்டிற்குள் ரோப் வே சேவை

பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு 'ரோப் வே' எனும் இழுவை ரயில் கட்டுமானத்திற்கான ஒப்பந்தம், ஏற்கனவே தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நிலம் வழங்குவதில் வனத்துறை - வருவாய் துறை இடையே ஏற்பட்ட பிரச்னையால், பணி துவங்குவது தாமதமானது.தற்போது, இப்பிரச்னையில் சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. சபரிமலையில் வழங்கப்பட்ட நிலத்தின் அளவுக்கேற்ப, கொல்லத்தில், வனத்துறைக்கு நிலத்தை அளிக்க வருவாய் துறை ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது, டீசல் டிராக்டர்கள் வாயிலாக, கோவிலுக்கு சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவதால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், வயதானர்கள் கோவிலுக்கு செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.ரோப் வே சேவை துவங்கப்படுவதன் வாயிலாக, சரக்கு போக்குவரத்துக்கும், வயதான, நோய்வாய்ப்பட்ட பக்தர்களை அழைத்துச் செல்வதும் எளிதாகும். ரோப் வே பணிகள் விரைவில் துவங்கப்படும். அடுத்த மகர, மண்டல விளக்கு பூஜை காலத்துக்குள் இந்த சேவை நடைமுறைக்கு வரும்.சபரிமலை ரோப் வே, 2.7 கி.மீ., நீள கேபிள் கார் அமைப்பில் இருக்கும்.- வி.என்.வாசவன்,கேரள மாநில தேவசம் போர்டு அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி