உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் நிதிஷ் குமார் வெற்றி வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!

பீஹாரில் நிதிஷ் குமார் வெற்றி வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

பீஹாரில் மீண்டும் நிதிஷ் குமார், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு 5 விஷயங்கள் முக்கியமாக கருதப்படுகிறது.பீஹார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே தேஜ கூட்டணி முன்னிலையில் உள்ளது. இது பீஹாரில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு 5 விஷயங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. அதன் விவரம் வருமாறு: அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது ஆட்சியைப் பிடிக்க பக்கபலமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கு 1.3 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. இது வழக்கத்தை விட தேஜ கூட்டணிக்கு பெண்களின் ஓட்டுகளை அதிகரிக்க செய்துள்ளது. தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஓட்டளித்தனர். மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது. இது தேஜ கூட்டணி தற்போது முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றால் மாதம் ரூ.2500 தருவதாக அளித்த வாக்குறுதியை நம்புவதற்குப் பதிலாக, பெண்கள் நிதிஷ் குமார் மீதான தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தினர். 1.2 கோடி மூத்த குடிமக்களுக்கான முதியோர் ஓய்வூதியத்தை நிதிஷ் குமார் ரூ.400 லிருந்து ரூ.1,100 ஆக உயர்த்தியது ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.மூத்த குடிமக்கள் இதை நிதிஷ் குமாரிடமிருந்து கிடைத்த பெரிய பரிசாகக் கருதினர். இதனால் மீண்டும் நிதிஷ் குமார், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியை அமைக்க இருக்கிறது. பீஹார் மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

chennai sivakumar
நவ 14, 2025 13:55

ஆகா மொத்தத்தில் காசேதான் கடவுள் அப்பா


Palanisamy Sekar
நவ 14, 2025 13:54

மத்திய அரசுடன் இணக்கமான நெருக்கத்தை பயன்படுத்தி நிறைய பலன்களை பீகார் மக்களுக்காக பயன்படுத்தி கொண்டார். மோதல் போக்கை கையாண்ட ஸ்டாலின் ஒரு பயனுமில்லாத அரசியல்வாதி. தக்க சமயத்தில் இண்டி கூட்டணியை விட்டு வெளியே வந்து பீகார் மக்களுக்காக மத்தியில் இருக்கும் பாஜக அரசை பயன்படுத்திக்கொண்டார். இதுதான் ராஜதந்திரம். விவேகமுள்ள அரசியல் தலைவர் நிதீஷ். இன்னும் ஜொலிக்கும் பீகார். குடியால் போதையால் தள்ளாடும் தமிழ்நாட்டை விட்டு விரைவில் வெளியேறுவார்கள் தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள்.


Mohan
நவ 14, 2025 13:54

அப்போ இலவசம் தான் வேலை செஞ்சிருக்கு அப்டியே தில்லு முள்ளு கட்சி பார்முலாவாச்சே ....ஆக மொத்தம் ஒவ்வொரு மாநில கஜனாவும் காலியாக போகுது


A.Gomathinayagam
நவ 14, 2025 13:53

இலவசங்கள் தான் வெற்றியை பெற்று தருகின்றன


Selvakumar Krishna
நவ 14, 2025 13:52

எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை, வோட்டு திருட்டு, விதியை மீறி 10000 ரூ பணம் , கையாலாகாத தேர்தல் ஆணையம் இவையே இந்த விடியாத வெற்றிக்கு காரணம்


SS
நவ 14, 2025 13:46

ஏக்நாத் ஷிண்டே தேர்தலுக்கு முன் மகளிர் உரிமைத் தொகை ரூ1500/- வழங்கினார். நிதிஷ் தேர்தலுக்கு முன் 1.3 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ10000/- வரவு வைத்தார். இனி இந்த பார்முலாவை மற்ற கட்சிகளும் பின்பற்றும்.


தியாகு
நவ 14, 2025 13:29

வட மாநிலத்திவரை கிண்டல் செய்தாலும் அவர்கள் தெளிவாக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத மோடிஜியின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்று தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும் தமிழர்கள் ஒவ்வொரு முறையும் ஊழலிலும் லஞ்சத்திலும் ஊறிப்போன கட்டுமர திருட்டு திமுகவிற்கு வாக்களித்து தங்களை ஆள வைத்து அழகு பார்க்கிறார்கள். விளங்கிடும் தமிழ்நாட்டின் எதிர்காலம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை