உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல ரவுடி பிஷ்னோய் தலைக்கு விலை வைத்த கர்னி சேனா!

பிரபல ரவுடி பிஷ்னோய் தலைக்கு விலை வைத்த கர்னி சேனா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசை கர்னி சேனா அமைப்பு அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அக்டோபர் 12ம் தேதி சட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களில் பல பகுதியில் கூலிப்படைகளை வைத்து லாரன்ஸ் பிஷ்னோய் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான். பிஷ்னோய் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.இந்நிலையில் அவனது தலைக்கு ஷத்ரிய கர்னிசேனா அமைப்பு ரூ.1.11 கோடி விலை வைத்துள்ளது.வீடியோ ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை அதன் தேசிய தலைவர் ராஜ் ஷெகாவத் அறிவித்து உள்ளார். அவர் அந்த அறிவிப்பில் கூறி உள்ளதாவது; பிஷ்னோயை அழிக்கும் எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் ரூ.1.11 கோடி வெகுமதி தரப்படும். நிலைமையை அரசு நிர்வாகம் முறையாக கையாளவில்லை என்று அந்த வீடியோவில் கூறி உள்ளார்.பிஷ்னோய் தலைக்கு கர்னிசேனா அமைப்பு விலை வைத்துள்ளதற்கு பின்னணி காரணம் உண்டு. ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னிசேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொகாமடி 2023ம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

லிங்கப்பா
அக் 22, 2024 18:55

பலே... இந்த நீதிமன்றம், சட்டம், போலீசை, நம்பினால் வேலைக்கு ஆகாதுன்னு புரிஞ்சிடிச்சு கர்னி சேனாவுக்கு.


என்றும் இந்தியன்
அக் 22, 2024 17:22

காவல் துறை நீதிமன்றம் அறிவிழந்து உறங்குகின்றது இதனால் என்று தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது . அவன் பல கொலை கொள்ளை ........... அவன் மேல் பல வழக்குகள்????என்ன போலீசு ???அநீதிபதிகளே நல்ல பெட்டி கிடைசிச்சா அதான் மவுனமாக இருக்கின்றிர்களா


வைகுண்டேஸ்வரன்
அக் 22, 2024 17:05

கர்னி சேனா வும் பிஷ்னோ கும்பல் மாதிரி ஒரு அமைப்பு தான். ராஜ்புத் களின் இட ஒதுக்கீடு க்காகப் போராட்டம் நடத்த உருவான அமைப்பு. இதுக்கும் பிஷ்னோய் கும்பலுக்கும் அடிதடி நடந்ததில் கர்னிசேனா தலைவரை பிஷ்னோய் கும்பல் போட்டு தள்ளி விட்டது. இப்போ அதுக்கு போலீஸ் மூலம் பழி வாங்க இந்த அறிவிப்பு.


krishnan
அக் 22, 2024 16:15

ஹிந்துக்கள் நலனை காக்க , இந்துக்கள் கொலைக்கு பழி வாங்க சரியான ஆள் . இந்துக்களுக்கு ஒரு லாடன் , ஒரு தாவூது தேவை


Sridhar
அக் 22, 2024 14:27

பிஷனாய் மாதிரி நிறையபேர் நாட்டுல உருவானாதான் பயங்கரவாதிகளுக்கு கொஞ்சமாவது கிலி கொடுக்கமுடியும். போலீஸ் நீதிமன்றம் பிரதமர்னு ஒருத்தருக்கும் பயப்படாமல் இருந்த தாதா சல்மான் கானே இன்னைக்கு மரண பீதியில் இருக்கான்னா, அதுக்கு காரணம் நம்ம ஆளுதான் இதே பாணியிலே எவனெல்லாம் எங்க கடவுள அவமதிச்சுடீங்கனு கழுத்தை வெட்டி கொல்ல அறைகூவல் விடுகிறானோ, அந்த ஆட்களுக்கும் இதே போல் ஒரு மிரட்டல் விட்டா அடங்குவானுங்களோ? போலீசுக்கு பயப்படாத கும்பல் இப்போ தலைக்கு விலை வச்சவுடனேயே பயப்படுத்து பாருங்க. முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்.


Ramesh Sargam
அக் 22, 2024 12:43

இதுபோன்ற ரவுடிகளுக்கு என்கவுண்டர்தான் சரியான தீர்ப்பாக இருக்கமுடியும்.


Narayanan Sa
அக் 22, 2024 11:58

கர்ணிசேனா எந்த காவல் துறை அதிகாரிக்கும் வெகுமதி தர தேவையில்லை ஏனென்றால் பிஷ்ணநோய் இது வரை முக்கியம் பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகளை கொலை செய்து இருக்கிறான். அவன் இது வரை பிடிப்படாமல் இருக்கு பல போலீஸ் அதிகாரிக்களுக்கு மற்றும் அரசியல் வாதிகளுக்கு நிறைய லஞ்சம் கொடுத்து இருப்பான். அதனால் அவர்களைக்கு கொடுக்கிம் பணத்தை ஒரு தோழிலுக்கு மூலதனமாக கொடுத்தால் பலர் நம் சமுதாயத்தில் பயன் பெறுவார். பிஸ்நோயை என்கவுண்டர் செய்து விடலாம்.


முக்கிய வீடியோ