உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22 ஆயிரம் கோடி மீட்பு: பிரதமர் மோடி

பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22 ஆயிரம் கோடி மீட்பு: பிரதமர் மோடி

புதுடில்லி: பொது மக்களை கொள்ளையடித்தவர்கள், கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத்துறையானது, இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி பணத்தை கைப்பற்றி உள்ளது. இந்த பணமானது, திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று உலகில் அதிக இளைஞர்கள் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளைஞர்களின் திறன் மேம்பட்டு வருவதுடன், புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையின் தாரக மந்திரமாக நாடே முதன்மை என்பது உள்ளது.ஒரு காலத்தில், அனைத்தும் நாடுகளுடனும் சம தூரத்தை பேணுவது என்ற கொள்கையை பின்பற்றி வந்தது. ஆனால், இன்று இந்தியாவின் கொள்கையானது, அனைவரையும் நெருக்கத்தில் கொண்டு வருவது என மாறி உள்ளது. சர்வதேச கொள்கை முடிவு எடுக்கும் அமைப்புகளில் , உலகின் தெற்கு பகுதியின் வலுவான குரல் உள்ள நாடாக இந்தியா மாறி வருகிறது. சர்வதேச யோகா தினம், பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையம் மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இது துவக்கம் தான். சர்வதேச அமைப்புகளில் இந்தியாவின் செல்வாக்கு முன் எப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது. இன்று உலக நாடுகள் இந்தியாவை உற்றுப் பார்க்கிறோம். எந்த நாட்டிற்கு சென்றாலும் இந்தியா குறித்து மக்கள் மகிழ்ச்சி உடன் பேசுகிறார்கள். 70 ஆண்டுகளில் உலகின் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறிய இந்தியா, அடுத்த 7 - 8 ஆண்டுகளில் உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறியது எப்படிசர்வதேச நிதியத்தின் புதிய தரவுகள் வந்து கொண்டு உள்ளன. இதில், 10 ஆண்டுகளில் ஜிடிபியை இரு மடங்காக்கிய உலகில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனதுபொருளாதாரத்தில் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலரை சேர்த்து உள்ளது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டு உள்ளனர்.எரிசக்தி வளம் உள்ளிட்ட உலகின் முக்கிய சவால்கள் குறித்த பிரச்னையை சரி செய்ய உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும். இதற்காக, சர்வதேச சோலார் ஒத்துழைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம். ஆக்கப்பூர்வமான எரிசக்தியில் சிறிய நாடுகளும் பலன் பெற முடியும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையானது, பருவநிலை மாற்றத்தில் நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கி உள்ளதுடன், உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. இந்த முயற்சியில் 100க்கும் மேற்பட்டநாடுகள் பங்கு அளிக்கின்றன.பொது மக்களிடம் இருந்து கொள்ளையடித்தவர்கள், திருடப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். இரவும் பகலும் விமர்சிக்கப்படும் அமலாக்கத்துறையானது, இதுவரை ரூ.22 ஆயிரம் கோடி பணத்தை கைப்பற்றி உள்ளது. இந்த பணமானது, திருடப்பட்டவர்களிடம் கொடுக்கப்பட உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Thirumal s S
மார் 28, 2025 23:11

கருப்பு பணம் கொண்டு வருவோம் என்று சொன்னிங்க அது என்ன ஆயிற்று


ஜெய்ஹிந்த்புரம்
மார் 28, 2025 22:36

என்னாது பிஎம் கேர்ஸ் பணத்துக்கு கணக்கு காட்டி திருப்பித் தரப் போகிறாரா? ம்ம்ம் அது இல்லையா? அது லட்சம் கோடிக்கணக்கில் திரும்பி கிடைக்குமே. அதை எப்ப செய்ய போகிறீர் பிரதமரே?


தமிழன்
மார் 28, 2025 22:11

அப்போ டீசல் பெட்ரோல் கேஸ் சிலிண்டர் விலையை 3.5 வருடமாக ஒத்த பைசா குறைக்காமல் காங்கிரஸை குற்றம் சொல்லி அடித்த கொள்ளை தேர்தல் பத்திரம் கொள்ளை அஜித்பவாரின் 70000 கோடி கொள்ளை இதையெல்லாம் எப்போது மீட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று சொன்னால் பரவாயில்லை


அப்பாவி
மார் 28, 2025 21:24

என்னுடைய பங்குகளை தானாகவே எடுத்துக்கொண்ட IEPF என்ற தண்ட நிறுவனத்துடன் ரெண்டு வருசமா முட்டி மோதிக்கிட்டிருக்கேன். உயிரோட இருக்குற எனக்கே டெத் சர்டிபிகேட் கேட்ட அரசு கொள்ளையர்கள். இவிங்க மற்றவங்க பணத்தை திருப்பி குடுக்கப் போறாங்களாம்.


ravi
மார் 28, 2025 20:53

can you stop robbing people from tolls and also on petrol and diesal ? We pay income tax, gst tax. property tax, road tax and also other taxes?


GMM
மார் 28, 2025 20:40

மக்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் ஏராளம். ஆனால், அமலாக்க துறை போன்ற விசாரணை அமைப்புகளை முடக்க நீதிமன்றத்தை வக்கீல்கள் அதிகம் பயன்படுத்தி விட்டனர். மத்திய அரசு நீதிமன்றம் செயல்பாடுகளை விதிமுறைகள் வகுத்து ஒழுங்கு படுத்த முடியும். கொலிஜியம் நியமனம் தற்போது மன்றம் விதிகள் இல்லாத நிர்வாகம் போன்ற அனைத்தையும் தன் பொறுப்பில் வலுக்கட்டாயமாக எடுத்து வருகிறது. இதனை சீர் செய்யாமல், மத்திய அரசு எந்த இலக்கையும் எளிதில் அடைய முடியாது. நிர்வாக விதிகளை நீதிமன்றத்தில் அமுல் படுத்தினால் தற்போது போதும்.


இந்தியன்
மார் 28, 2025 20:30

மோதி அய்யா, நாட்டுக்கு இன்னும் ஏதாவது, மக்களுக்கு பயனளிக்கும், எதிர்பாராத திட்டங்களை அறிவித்து, ஆச்சரியம் கொடுங்கள்... அப்போதுதான் இந்த ரூ200 உபி க்களின் கருத்து கொட்டம் அடங்கும்...


Ramesh Sargam
மார் 28, 2025 20:25

பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22 ஆயிரம் கோடி மீட்பு. சிறப்பு. கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அல்லது நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து மீண்டும் கொள்ளையடிக்கவிட்டிருக்கிறதா?


SUBBU,MADURAI
மார் 28, 2025 20:14

திமுக தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணம் இதில் அடங்குமா? அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்திய ராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் அப்படி அனுப்பி வைத்தாலும் உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதிக்கும். ஏனென்றால் திமுகவினர் இந்தியா முழுவதும் நீதித்துறையில் தங்கள் ஆடகளை நிலைநிறுத்தி உள்ளனர் அதனால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது கொலீஜியம் நீதிமன்ற முறையை ஒழித்தால்தான் இங்கு சாமானியனுக்கும் நீதி கிடைக்கும் இல்லாவிட்டால் திமுக போன்ற பணக்கார கட்சிகளின் அடிமையாகத்தான் இருக்கும் உச்சநீதிமன்றம் உட்பட..


முருகன்
மார் 28, 2025 20:31

உங்கள் ஆதரவு கட்சியின் சொத்து மதிப்பு தெரியுமா உங்களுக்கு


Ambedkumar
மார் 28, 2025 20:09

திருடர்களைத் தண்டித்தீர்களா?


Arunkumar,Ramnad
மார் 28, 2025 20:17

திமுக திருடர்களை தண்டித்தீர்களா என்று வெளிப்படையாக கேட்பதுதானே அதில் என்ன பயமா? பயந்தால் இந்தக் காலத்தில் வேலையாகாது


சமீபத்திய செய்தி