உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.250 சன்மானம்

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்பினால் ரூ.250 சன்மானம்

பெங்களூரு: 'சாலையில் குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு, 250 ரூபாய் சன்மானம் தரப்படும்; குப்பை வீசும் நபருக்கு 1,000 முதல் 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவித்து உள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில், குப்பை பிரச்னை தீராத தலைவலியாக உள்ளது. துப்புரவு பணியாளர்கள் காலையில் வீடு வீடாக குப்பை சேகரிக்க வந்தாலும், பலரும் குப்பையை கொடுப்பதில்லை. அவர்கள் சென்ற பின், சர்வ சாதாரணமாக, வீதிகளில் குப்பையை வீசி செல்கின்றனர். இதனால், நகரின் பிரதான சாலைகள் கூட குப்பை மேடாக காட்சி அளிக்கின்றன. இதை கட்டுப்படுத்த, புதிய முயற்சியில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் இறங்கி உள்ளது. அதாவது, குப்பையை பொது இடங்களில் வீசுவோரை யார் வேண்டுமானாலும் தங்கள் மொபைல் போன்களில் வீடியோ எடுக்கலாம். வீடியோவை, 94481 97197 என்ற, 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும், வீடியோ எடுக்கப்பட்ட இடம், அந்நபர் குறித்த விபரங்களை பகிர வேண்டும். இதன்படி, குப்பையை வீசியவர், அவரது வீடு அடையாளம் காணப்படும். அவரது வீட்டின் முன், பல இடங்களில் சேகரித்த குப்பை கொட்டப்படும். மேலும், அந்நபருக்கு 1,000 முதல் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். வீடியோவை அனுப்பிய நபருக்கு, 250 ரூபாய் சன்மானமாக வழங்கப்படும். சன்மானம், அவரது யு.பி.ஐ., கணக்குக்கு அனுப்பப்படும். 'தெருவில் குப்பை வீசி அத்துமீறுவோருக்கு, பக்கத்து வீட்டுக்காரரால் கூட 10,000 ரூபாய் பறிபோகலாம் என்ற பயத்தின் மூலம் குப்பை வீசும் சம்பவங்கள் குறையும்' என, அதிகாரிகள் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
நவ 04, 2025 10:05

அதனை AI மற்றும் போட்டோ ஷாப்வெட்டி வொட்டி மூலம் வீடியோ எடுக்கவில்லை என்று கேஸ் பதிய போகிறார்கள் உஷார் , ஆனால் வரவேற்கத்தகுந்த நிகழ்வு


Ramesh Sargam
நவ 04, 2025 09:01

ராமமூர்த்தி நகரில் கோஷிஸ் மருத்துவமனை எதிரில், மருத்துவமனை இருக்கிறது. மருத்துவமனை என்றும் பாராமல் அங்குள்ளவர்கள் வீதியில் இரவு வேளையில் திருடர்கள்மாதிரி வந்து குப்பைகளை போட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள். முதலில் அவர்களை பிடித்து அபராதம் விதிக்கவேண்டும். தினமும் குப்பை அள்ள வராத கார்பொரேஷன் அலுவலர்களை பணிநீக்கம் செய்யவேண்டும்.


Krishna
நவ 04, 2025 07:36

Put Penalty on Govts/leaders Not Placing Dustbins Everywhere


புதிய வீடியோ