வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவர நமது பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு சாதனங்கள் தயார் செய்ய போறார்
திருட்டு........
அகலக்கால் வைத்ததன் விளைவு
மும்பை: ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் மும்பை மற்றும் டில்லியில், அனில் அம்பானிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.இந்த நிலையில், ரூ.2,796 கோடி முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் யெஸ் வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
இவர நமது பாதுகாப்பு படைக்கு பாதுகாப்பு சாதனங்கள் தயார் செய்ய போறார்
திருட்டு........
அகலக்கால் வைத்ததன் விளைவு