உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்துக்கு ரூ. 6.81 லட்சம் கோடி!

ராணுவத்துக்கு ரூ. 6.81 லட்சம் கோடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராணுவத்துக்கு 2025 - 26ம் நிதியாண்டில் 6,81,210 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 6.22 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில்,புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் பிற இராணுவ தளவாடங்களை வாங்குவது உள்ளிட்ட மூலதனச் செலவினங்களுக்காக மொத்தம் 1,92,387 கோடி ரூபாய்.தினசரி இயக்கச் செலவுகள் மற்றும் சம்பளங்களுக்காக 4,88,822 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 1,60,795 கோடி ரூபாய் ஓய்வூதியங்களுக்கு ஒதுக்கப்படும். விமானங்கள் மற்றும் விமான இயந்திரங்களுக்கு 48,614 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்படை கப்பல் கட்டுமானத்துக்கு, 24,390 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற உபகரணங்களுக்கு 63,099 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். திட்டமிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கான தொகை 1.91 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
பிப் 02, 2025 07:52

அருமை.. பாகிஸ்தான் மூன்றாக உடைய வகை செய்யவேண்டும்.


N.Purushothaman
பிப் 02, 2025 06:09

நம்முடைய எதிரி நாடுகள் ராணுவத்திற்காக பெரும் தொகை செலவு செய்யும் நிலையில் நாம் தற்காப்பிற்காக ராணுவத்தை நவீனப்படுத்தி போர் யுக்திகளை காலத்துக்கேற்ப மாற்றுவது தலையாய கடமை.. எல்லைகளை காக்க நிச்சயம் செய்தே ஆக வேண்டும்..


xyzabc
பிப் 02, 2025 03:19

Well done Nirmala ji. Armed forces need uplift and attention. Some of the regional parties dont care about the nation.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை