உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது; மோகன் பகவத் பெருமிதம்

ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது; மோகன் பகவத் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது என்று, நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் விழாவில், அதன் தலைவர் மோகன் பகவத் பெருமிதம் தெரிவித்தார்.ஆர்எஸ்எஸ்-ன் 100வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நாக்பூரில் நடந்த விழாவில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது; அமெரிக்கா புதிய வரிவிதிப்புகளை பிற நாடுகளுக்கு விதித்து வருகிறது. இது அந்த நாட்டின் நலனுக்கு உதவுகிறது. ஆனால், இதன் விளைவுகளை பிற நாடுகள் சந்தித்து வருகின்றன. எந்தவொரு நாடும் தனியாக வளர முடியாது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jjtfzpa7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒரு நாடு பரஸ்பர சார்பு அல்லது ராஜதந்திர உறவுகள் மூலம் முன்னேறும். ஆனால் ஒரு நாடு மற்றொரு நாட்டை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. அதேவேளையில், நாம் கட்டாயம் தற்சார்புடைய நாடாக இருக்க வேண்டும். அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர உறவுகள் அவசியத்தின் காரணமாக இருக்கக் கூடாது. மாறாக அது நம்முடைய தேர்வு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆப்பரேஷன் சிந்தூரில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்தது. இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் நடந்த வன்முறை சம்பவம் கவலையளிக்கின்றன. மக்கள் நலனை புறக்கணித்தால் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அண்டை நாடுகளில் நடந்ததைப் போன்ற இடையூறுகளை உருவாக்க விரும்பும் சக்திகள் நமது நாட்டின் உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டு வருகின்றன.தேசிய உணர்வு, கலாசாரத்தின் மீதான நம்பிக்கை தற்போதைய இளைய தலைமுறையினரிடையே அதிகம் காணப்படுகிறது. தனி நபர்கள், சமூக சேவை நிறுவனங்கள் சமூகத்தில் பின்தங்கியுள்ள பிரிவினருக்காக சுயநலமின்றி சேவைகளை வழங்கி வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

வலிமையுடன் இருக்க வேண்டும்

மோகன் பகவத் மேலும் பேசியதாவது: ஹிந்து சமுதாயம் பொறுப்பு மிக்கதாக இருக்கிறது. 'எங்களுக்கு', 'அவர்களுக்கு' என்ற கொள்கை இங்கு இல்லை. பிளவுபட்ட கட்டடம் உறுதியாக நிற்காது. அந்நிய படையெடுப்பாளர்கள் இங்கு வந்தனர். ஆனால், நமது வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை. நமது கலாசார ஒற்றுமையே நமது பலம். பிரயாக்ராஜ் நகரில் நடந்த மஹாகும்பமேளா நம்பிக்கை மற்றும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தது.காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகுந்த கவலையையும் வேதனையையும் அளித்தது. நமது அரசு அதற்கு உறுதியான பதிலடி கொடுத்தது. இதில், நமது தலைமையின் உறுதியான நிலைப்பாடு மற்றும் நமது ஆயுதப்படைகளின் வீரம், நமது சமூகத்தின் ஒற்றுமை ஆகியவை வெளிப்பட்டது. நாம் மற்ற நாடுகளுடன் நட்புடன் இருக்கிறோம். வரும் காலத்திலும் அது தொடரும். அதேநேரத்தில் நாம் இன்னும் கவனத்துடனும், வலிமையுடனும் இருக்க வேண்டும். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பல நாடுகளின் கொள்கைகள் மூலம் யார் நமது நண்பர்கள் மற்றும் எதிரிகள் என்பதை வெளிக்காட்டியது. நக்சலைட்கள் பல பகுதிகளில் சுரண்டல், அநீதி மற்றும் வளர்ச்சியின்மை இருந்தது. தற்போது அந்தத் தடை நீங்கி உள்ளது. நீதி, வளர்ச்சி, நல்லெண்ணம் உள்ளிட்டவை அந்தப் பகுதிகளில் வளர்வதற்கு உறுதியான நடவடிக்கை தேவை. நாட்டை உலகளாவிய தலைவராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது. தெற்கு ஆசியாவுக்கு தேவையான குடிநீர் இமயமலையில் தான் உருவாகிறது. இமயமலையில் ஏற்படும் பேரழிவு, பாரதத்துக்கும் , மற்ற நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Senthoora
அக் 02, 2025 17:53

அப்படி வலிமை காட்டி இருந்தால், எதுக்கு பாகிஸ்தானுடன் கிர்கேட் விளையாடியபின் கைகுலுக்க முடியாது என்று ஆடம் பிடித்தது. இனிமேல் தொடாதே தெரியுதால் என்று கைகுலுக்கி இருக்கனும், கைகுலுக்கினால் கையை முற்றுக்குவாங்க என்று பயமமோ?


ஆரூர் ரங்
அக் 02, 2025 15:00

ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக நமது ராணுவமே கூறுகிறது. பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்படும் வரை தொடரும்.


Rajah
அக் 02, 2025 14:34

பிரிவினைவாதத்தை மட்டும் முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களுக்கு இவர் சொல்வது கசப்பாகத்தான் இருக்கும். பாகிஸ்தான் நம் நாட்டின் மீது போர் தொடுத்தால் அதை நியாயப்படுத்தும் அரசியல் வாதிகள் உள்ள நாடு இது. என்ன ஜென்மங்களோ


Nathansamwi
அக் 02, 2025 13:50

இன்னும் எவ்ளோ வருஷத்துக்கு இதே புராணம் பாடுவாங்களோ ? மழை வந்தா தண்ணி நீக்காத ரோடு போடா திறமை இல்லை ...ஆனால் பேச்சு மட்டும் வாய் கிழியும் ...


Nagendran,Erode
அக் 02, 2025 14:33

உன் ஊருக்கு ரோடு இல்லைன்னா திமுக திராவிட மாடல் அரசை கேளு. உனக்கு மூளை முட்டியிலா இருக்கிறது?


Nathansamwi
அக் 02, 2025 17:30

தேசிய நெடுஞ்சாலை யாரோட கட்டுப்பாட்டுக்குக்கு கீழ் வருது ? தப்பு யார் செஞ்சாலும் தப்பு தான் ...


Moorthy
அக் 02, 2025 13:34

சிந்தூர் என்றால் திலக்.


முதல் தமிழன்
அக் 02, 2025 12:24

இன்னும் முடியிலையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை