உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நெதர்லாந்து சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: பாகிஸ்தான் அரசும் அதன் ராணுவமும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளன. பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கின்றன. பாகிஸ்தான் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

வலுவான உறவு

பாகிஸ்தான் அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாக நெதர்லாந்து உள்ளது. இந்தியா, நெதர்லாந்து ஆகிய இருநாடுகளுக்கு இடையே வலுவான உறவுகள் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

பாசாங்கு

பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் சம்பந்தப்படவில்லை என்று பாசாங்கு செய்ய வேண்டாம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சர்வதேச குற்றமாகும், அதை மன்னிக்கவோ, நியாயப்படுத்தவோ கூடாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 23, 2025 22:09

ஏறக்குறைய 78 ஆண்டுகளாக கேட்டு கேட்டு புளித்து போன வசனம்....கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.....வேற ஏதாவது புதிதாக சொல்லுங்க சார்....!!!


Ramaraj P
மே 23, 2025 20:42

பாகிஸ்தான் ஒரு பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை யாருடையது.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 23, 2025 23:08

பாகிஸ்தான் பிச்சை எடுக்க காரணம் வேற யாரு நம்ம திராவிடியா மாடல் பேரரசர் திரு.சுடலை தானே.....!!!


Ramesh Trichy
மே 23, 2025 14:40

அமெரிக்கா பின்லாடனை ஒழிக்க 10 வருஷம் எடுத்து கொண்டது,


Rathna
மே 23, 2025 13:05

4 நாள் போரில் 7 விமானங்கள், 12 ரேடார்கள், ஒரு விமானம் தாங்கி ரேடார், விமான நிலையங்களில் சேதம் ஆக மொத்தம் கிட்டத்தட்ட 15000 கோடி ரூபாய்க்கு பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளது என்று IDRW என்ற ராணுவ முகமை தெரிவித்து உள்ளது. இந்தியாவிற்கு 1-2 விமானங்கள் சேதம் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் 80 விமானங்கள் தாக்குதலுக்கு சென்ற நிலையில் இந்த சேதம் மிக சிறியதே இந்திய விமான படை வீரர்களுக்கு எந்த உயிர் சேதமும் இல்லை. தீவிரவாதிகள் கிட்டத்தட்ட 120 பேருக்கு மேல் மற்றும் ராணுவ, விமான படை வீரர்கள் 60-75 பேர் பாகிஸ்தானில் உயிர் சேதம் அடைந்து உள்ளனர். இந்த போர் டாக்ட்டிகல் என்ற போர் வகையை சேர்ந்தது. குறிகிய காலத்தில் மிக பெரிய சேதத்தை ஏற்படுத்துவது. 3 நாள் போர் 15000 கோடி ரூபாய் சேதம் என்பது பாக்கிஸ்தான் வாங்க போகும் IMF கடன் 15000 கோடி ரூபாயை போர் மூலம் இழந்து விட்டது. இந்தியா நீண்ட போரில் ஈடுபட்டால் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படுவதோடு அதன் வளர்ச்சியும் நீண்ட காலத்திற்கு தேங்கும் நிலை ஏற்படும். இதை தவிர்க்கவே பிரதமரும், அஜித் டோவலின் ஆலோசனைப்படி போரை நிறுத்தி உள் நாட்டு தீவிரவாத அழிப்பை தொடங்கியுள்ளனர். இதன்படி பாக்கிஸ்தானுக்கு உளவு சொல்வோர் மற்றும் காஷ்மீர் உள் நாட்டு தீவிரவாதவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னொரு சம்பவம் நடந்தால் மீண்டும் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்.


மூர்க்கன்
மே 23, 2025 11:34

ஒண்ணுக்கும் உதவாத ஊழை உதாரு??


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 23, 2025 17:19

கந்தர்வன் ன்ற பேரு சரிப்பட்டு வரலையா கின்சிர் ??


Raja k
மே 23, 2025 11:31

கோடி கோடியா கொட்டி வாங்கிய, இன்னும் பல்லாயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்ட ரபேல் விமானத்துக்கு என்ன ஆச்சு, எதிரி நாட்டுக்கு சொல்ல வேண்டாம், சொந்தநாட்டு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டாமா??


Ramesh Sargam
மே 23, 2025 11:30

கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை இந்தியா தவறவிட்டுவிட்டது


Narayanan Muthu
மே 23, 2025 11:13

பகல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எங்கே. இதுவரை இதற்க்கான பதில் கிடைக்கவில்லையே


ஆரூர் ரங்
மே 23, 2025 11:37

அப்போ அதில் ஒரு பயங்கரவாதியையாவது பிடித்தார்களா?


Barakat Ali
மே 23, 2025 13:57

லாஜிக் இல்லாத, குறைந்த பட்ச அறிவையும் பயன்படுத்த விரும்பாதவர்கள் கேட்கும் கேள்வி .... இந்தியா நடத்திய தாக்குதலில் அவர்கள் இறந்திருக்கலாம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை