உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்; போராக மாறும் அபாயம்: எச்சரிக்கிறார் ஜெய்சங்கர்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்; போராக மாறும் அபாயம்: எச்சரிக்கிறார் ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மத்திய கிழக்கில் நிலவும் மோதல், பெரிய போராக மாறும் அபாயம் உள்ளது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அமெரிக்கா, வாஷிங்டனில் நடந்த கலந்துரையாடலில் ஜெய்சங்கர் பேசியதாவது: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் முழு அளவிலான போராக மாறும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பொதுமக்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

மத்தியஸ்தம்

இந்தியா இந்த விவகாரத்தில் விவாதங்கள் மற்றும் மத்தியஸ்தம் செய்ய முடியும். இக்கட்டான காலங்களில் தகவல் தொடர்புகளின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். லெபனானில் நடந்தது மட்டுமல்ல, செங்கடல் மற்றும் ஈரான், இஸ்ரேலுக்கு இடையே நடக்கும் மோதல்கள் பெரியதாக மாறி வருவது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.

மக்களுக்கு தீங்கு

கடந்தாண்டு அக்டோபர் 7ம் தேதி நடந்த மோதல், பயங்கரவாத தாக்குதலாக நாங்கள் கருதுகிறோம். இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் எந்தவொரு நாடும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க வேண்டும். பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் செயல்படுவது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரான் செல்லாதீர்கள்!

இதற்கிடையே, 'அத்தியாவசிய தேவையின்றி ஈரான் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்; ஈரானில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என மத்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
அக் 02, 2024 20:47

ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி, அல்கொய்தா, தாலிபான் என்ற தீவிர மூர்க்க வாதிக்கை உலகம் முழுதும் அழிக்க வேண்டும் இல்லையேல் மனித குலம் அழிந்துவிடும் முதலில் மத்திய ஆசியாவில் இந்த கும்பலை ஒழித்தாலே மற்ற நாடுகள் சுபிட்சமாக வளரும்


N Sasikumar Yadhav
அக் 02, 2024 19:43

இசுலாமிய பயங்கரவாதிகள் அழிந்து உலகம் அமைதியாக இருக்க பாரதம் இஸ்ரேலுக்கு துணையாக இருக்க வேண்டும்


தமிழ்வேள்
அக் 02, 2024 19:11

பாரதத்தில் உள்ள மூர்க்க பயங்கரவாத ஆதரவு டிக்கெட்டுகளை மூட்டை கட்டி லெபனான் சிரியா ஈரானுக்கு அனுப்பி விடுங்கள்.. நமக்கு ஒரு தொல்லை நீங்கும்...


Dravidian
அக் 03, 2024 08:18

DMK and communists nu sollirukalamae??


Oviya Vijay
அக் 02, 2024 18:20

உலக சந்தையில் விலை குறைஞ்சாலும் இப்போதைக்கு இந்தியாவுல பெட்ரோல் விலை குறைக்க எந்த யோசனையும் இல்லை. அப்படித் தானுங்களே எஜமான்... ஏத்துறதுக்கு வேணா காரணத்தை சொல்றதுக்கு ரெடியா இருப்பீங்க...


bgm
அக் 03, 2024 08:21

நேர்மையாக வரி கட்டுவரின் வரி பணத்தில் சலுகை அனுபவித்து 200 ரூவா அடிமை. கேவலம்


பாக்கியபதி
அக் 02, 2024 16:05

இப்ப மட்டும் போர் நடக்கலியா? பேசாம ஐ.நா ஓட்டெடுப்பில் பங்கெடுக்காம விலகி இருந்தாப்புல இப்பவும் விலகியே இருங்க.


P. VENKATESH RAJA
அக் 02, 2024 15:20

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவது சரி தான்


முக்கிய வீடியோ