உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலை வருமானம் அதிகரிப்பு: கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி அதிகம்

சபரிமலை வருமானம் அதிகரிப்பு: கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி அதிகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலையில், மகரவிளக்கு சீசனில் வருமானம் ரூ.440 கோடி கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.80 கோடி கூடுதல் ஆகும்.மண்டல பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த நவ.,15 திறக்கப்பட்டு டிச., 26 ம் தேதி வரை திறக்கப்பட்டது. பிறகு, மகர விளக்கு பூஜைக்காக டிச.,30ம் தேதி நடை மீண்டும் திறக்கப்ப்டது. கடந்த 14ம் தேதி மகரஜோதி தரிசனம் நடந்தது. கடந்த 18 ம் தேதி மண்டல மகர விளக்கு நெய் அபிஷேகமும் நடந்தது.இந்நிலையில், மாநில தேவசம் போர்டு துறை அமைச்சர் விஎன் வசவன் கூறியதாவது: மகர விளக்கு காலத்தில் சபரிமலைக்கு கிடைத்த வருமானம் ரூ.440 கோடியாக அதிகரித்து உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 80 கோடி ரூபாய் அதிகம் ஆகும். இக்காலகட்டத்தில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஒரு நாளில் அதிகபட்சமாக 1.8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 18 ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 -90 பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டு 65 பேர் மட்டுமே சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.கோயிலில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தேவசம் போர்டு சார்பில் கவுரவம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajakumar Ramasamy
ஜன 22, 2025 12:53

பக்தர்களின் அடிப்படை தேவைகளை கேரள அரசு கவனிக்கவில்லை. வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. பெரியப்பாதை பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அடிப்படை கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி அதிகம் இல்லாத இடத்தில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை தங்கவும். பக்தர்களிடம் இருந்து பணம் பறிக்கிறது. பிற மதத்தவர் பாதுகாப்பு மற்றும் முடிவெடுப்பதில் இருப்பதால், பக்தர்களின் உண்மையான தேவையை அவர்கள் உணரவில்லை.


S. Venugopal
ஜன 21, 2025 22:47

இந்த வருடம் போலீசே பத்து பத்து பேராகக் குழு அமைத்து தலைக்கு ரூபாய் 4000/- வாங்கிக்கொண்டு பம்பையிலிருந்து பதினெட்டாம் படி தேங்காய் உடைக்கும் வரை எக்ஸ்க்கார்ட்டாக நூதனமுறையில் வசூலித்த தொகையும் டோலில்காக்க ரூபாய் 3200/- வசூலிக்க வேண்டிய கட்டணத்துக்கு பதிலாக ரூபாய் 10000 முதல் ரூபாய் 12000/- வசூலித்த தொகையும் அரசுக்கோ தேவசம் போர்டுக்கோ போக வாய்ப்புகள் இல்லை என நினைக்கிறேன்.


ஆரூர் ரங்
ஜன 21, 2025 21:54

அடர்ந்த காட்டுக்குள் இத்தனை பக்தர்கள்? இயற்கை சுற்றுசூழல் என்னாகும் ?. லட்சம் மரங்களை வெட்டி விமான நிலையம்? பதிலாக அவரவர் வீட்டுக்கருகிலுள்ள ஆலயங்களை சீர் செய்து வழிபடலாம். அவையும் சக்திவாய்ந்த ஆலயங்கள்தான்.


S. Venugopal
ஜன 21, 2025 20:51

இந்த ஆண்டு மிகவும் அதிகஅளவில் வந்த பக்தர்களினால் கேரள அரசு மற்றும் தேவசம் போர்டு களுக்கு செலவும் பல மடங்கு அதிகரித்து இருக்கும்


Rajan A
ஜன 21, 2025 20:09

இது என்ன பெருமை? நாங்க 2 நாட்கள் டாஸ்மாக்ல ஈடு கட்டுவோம்ல


V வைகுண்டேஸ்வரன்
ஜன 21, 2025 20:39

அதென்ன, உங்கள் மாநிலத்தில் மட்டும் தான் மது விற்கிறீர்களா? வேற எந்த மாநிலத்திலும் மது விற்பனை இல்லையா? உங்க ஊரில் டாஸ்மாக் னா, கேரளா வில் Bevco பெவ்கோ. ஏன் எதுக்கெடுத்தாலும் டாஸ்மாக், டாஸ்மாக் னே யோசிக்கறீங்க???


Ramesh Sargam
ஜன 21, 2025 20:01

வருமானத்தில் அங்கு வரும் பக்தர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறேன். குறைந்தபட்சம் தங்க இடம், வயிற்றுக்கு உணவு. ஸ்வாமியே சரணம் ஐயப்பா.


புதிய வீடியோ