உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி

பாதுகாப்பாக பயணம்; இறைவனுக்கு நன்றி: சுபான்ஷு சுக்லாவின் தாயார் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: ஆக்சியம்-4 விண்வெளிப் பயணத்தின் குழுவினர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியதை அடுத்து, இறைவனுக்கு நன்றி என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா நெகிழ்ச்சியுடன் கூறினார்.சர்வதேச விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் பயணித்த டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக கடலில் தரையிறங்கியது. சுபான்ஷூ சுக்லா பூமிக்கு திரும்பும் நிகழ்வை, லக்னோவில் உள்ள சிட்டி மான்டெசரி பள்ளியில் நேரலையில் அவரது குடும்பத்தினர் பார்த்தனர். அப்போது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் வடித்தனர். தொடர்ந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h0bgisv0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனை தொடர்ந்து சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா அளித்த பேட்டி:என் மகன் பாதுகாப்பாக திரும்பியுள்ளார். இறைவனுக்கு நன்றி. இந்த நிகழ்வை வெளியில் நின்று, தகவல்களை பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. நான் உணர்ச்சிவசப்பட்டேன்.எப்படியிருந்தாலும், என் மகன் பல நாட்களுக்குப் பிறகு திரும்பியுள்ளார்.இவ்வாறு ஆஷா சுக்லா கூறினார்.பூமிக்கு விண்கலம் திரும்பியதும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 15, 2025 16:28

எங்க கிம்ச்சை மன்னரை மட்டும் ஸ்டிக்கர் ஒட்டிக்க அனுமதிச்சுராதீங்க .........


Amsi Ramesh
ஜூலை 15, 2025 17:04

கட்டுமரம் எல்லை அதுவரைக்குமா இருக்குது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை