உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல்

ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான் கானுக்கு, இன்று (அக்.,18) மிரட்டல் விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். இவருக்கு வயது 58. இவர் மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்., 14ம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயத சப்ளை செய்த மேலும் இரண்டு பேரையும் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=efpssw0j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர்.இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என்று மர்ம நபர்கள், மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர். அந்த செய்தியில் கூறியிருப்பதாவது: லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். கொடுக்க தவறினால், பாபா சித்திக்கை விட சல்மான் கானின் நிலை மோசமடைந்துவிடும். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பின்றி எங்கும் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
அக் 18, 2024 17:52

இருக்காதே... 25 லட்சத்திக்கே சோலியை முடிக்க ஒத்துக்கிட்டாங்களே. நேத்திக்கிதானே போலுஸ் அதிர்ச்சியாச்சு.


Duruvesan
அக் 18, 2024 16:16

விரைவில் மஹாவில் encounter , எலேச்டின் வருது வோட்டு வேணும்


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
அக் 18, 2024 14:34

வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மெஸேஜ் எந்த எண் எந்த நாடு எந்த மொபைல் ஆபரேட்டர் எந்த பெயர் என்று வாட்ஸ்அப் நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.


Narayanan Sa
அக் 18, 2024 13:04

இந்தியாவுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள் பலருக்கு வெளிநாட்டு தீவிரவாதிகளிடம் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த நிலையை வளரவிடக்கூடாது.


Ramesh Sargam
அக் 18, 2024 12:22

நாடெங்கும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், நக்ஸல்கள் ஊடுருவல் அதிகமாக உள்ளது. மக்கள் வொவொரு நிமிடமும் திக் திக் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு... சந்தேகப்படுபவர்களை என்கவுண்டர் செய்யவேண்டும்.


தமிழ்வேள்
அக் 18, 2024 11:27

டி கம்பெனி முதலாளி தாவூத் கேட்டால் மட்டும் ஒடனே கும்பிடு சாரி ஸலாம் போட்டு தார்தெரியுதில்லை? இப்பவும் கொடேன்? உன்னிடம் இல்லாத துட்டா? ஜிஹாதுக்கு மட்டும்தான் தருவியா?


ஆரூர் ரங்
அக் 18, 2024 10:55

மானைக் கொன்றவருக்கு அவமானம். வெறும் ஐந்து கோடி கேட்டு அவரை இழிவு படுத்திவிட்டான்.


raja
அக் 18, 2024 10:12

ஐந்து கோடி சல்மானுக்கு ஜுஜுபி.... பிள்ளையா குட்டியா கொடுகட்டுமே என்று மிரட்டல் விடுத்து இருப்பானுவோ...


சமீபத்திய செய்தி