உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரு மாநில தேர்தல் முடிவுகள்: பா.ஜ., தலைவர்கள் சொல்வது என்ன?

இரு மாநில தேர்தல் முடிவுகள்: பா.ஜ., தலைவர்கள் சொல்வது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஹரியானாவில் பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதற்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நட்டா உள்ளிட்டோர் வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளனர்.இது தொடர்பாக பிரதமர் மோடி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

ஹரியானா:

பா.ஜ.,வுக்கு மீண்டும் பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றியானது, வளர்ச்சிக்கான அரசியலுக்கும், சிறந்த நிர்வாகத்திற்கும் கிடைத்தது ஆகும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற எந்தவொரு வாய்ப்பையும் தவற விட மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.இந்த சிறந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கட்சி தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் மக்களுக்காக மட்டும் பணியாற்றவில்லை. நமது வளர்ச்சி திட்டத்தை அவர்களிடம் கொண்டு சென்றுள்ளீர்கள். இது, ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாகும்.

காஷ்மீர்

காஷ்மீரில் நடந்த தேர்தல் சிறப்பானது. மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த முறை அதிக ஓட்டுகள் பதிவானது, ஜனநாயகம் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.காஷ்மீரில் பா.ஜ.,வின் செயல்பாட்டை கண்டு பெருமிதம் கொள்கிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீர் மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம் என்ற உறுதியை அளிக்கிறேன். கடுமையாக உழைத்த தொண்டர்களுக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சிக்கும் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களின் பூமியான ஹரியானா, வெளிநாட்டில் சென்று ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டை அவமானப்படுத்தியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக 3 முறை மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி தலைமையில் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள பா.ஜ., அரசு மக்களின் நம்பிக்கை மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடும்.சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டு கொடுத்து மக்கள் ஆசிர்வதித்து உள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை போல் காஷ்மீரையும் பயங்கரவாதம் இல்லாத வளர்ச்சி அடை ந்த மாநிலமாக மாற்ற பா.ஜ., முக்கியத்துவம் அளிக்கும்.

பா.ஜ. தலைவர் நட்டா

காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம். காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. அதிக ஓட்டுகள் பதிவானது இதுவே முதல்முறை. அதிக வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றது, ஜனநாயக திருவிழாவின் உற்சாகத்தை பிரதிபலிக்கிறது. காஷ்மீரின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் பா.ஜ., உறுதிபூண்டுள்ளது. மாநிலத்தின் நலன் சார்ந்த விஷயங்களை தொடர்ந்து எழுப்புவோம். பா.ஜ., தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.ஹரியானாவில் பா.ஜ.,வுக்கு தொடர்ந்து 3வது முறையாக கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடி தலைமையிலான இரட்டை இன்ஜின் கொண்ட அரசு மீதான மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. காங்கிரசின் சமரச அரசியலை மக்கள் முற்றிலும் நிராகரித்து உள்ளனர். தொடர்ச்சியாக ஒரு அரசியல்கட்சி 3வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைத்துள்ளது. மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கு கிடைத்தது தான் இந்த ஹாட்ரிக் வெற்றி. பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நட்டா கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

RAAJ68
அக் 09, 2024 09:24

ஓட்டு வித்தியாசம் அதிகம் இல்லை எனவே ஓவரா ஆட்டம் போடாதீங்க.


பேசும் தமிழன்
அக் 09, 2024 07:50

முதலில் தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.... இங்கே தான் நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆட்கள் அதிக அளவில்.... தங்களுக்கு தமிழ்நாடு தான் பாதுகாப்பான இடம் என்று இருக்கிறார்கள்......அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.... அதற்க்கு பிஜெபி ஆட்சிக்கு வர வேண்டும்.


Kasimani Baskaran
அக் 09, 2024 05:49

கட்சி பாகுபாடு பார்க்காமல் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்தால் பாஜகவுக்கு என்றும் ஏறுமுகம்தான். அதே சமயம் திராவிடர்கள் என்று சொல்லித்திரியும் கூட்டம் சொல்லும் பொய்களை பொதுமக்களிடம் வெளிச்சம் போட்டுக்கட்டவேண்டியதும் பாஜகவின் கடமை.


Jay
அக் 08, 2024 23:12

நாட்டுப் பற்றும், வாரிசு அரசியலைப் பற்றி புரிந்துணர்வும், சிறுபான்மையினரை தாஜா செய்வதை கண்டு கடுப்பும் அடைந்திருந்தால் அவர்களுக்கு ஓட்டு போட வேறு எந்த கட்சியும் இல்லை பாஜகவை தவிர. தமிழகம் போன்று வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் இந்த புரிந்துணர்வு வராமல் அவர்களுக்கு இருக்கும் மீடியா பவரை பயன்படுத்தி தள்ளி போடுகிறார்கள்.


rao
அக் 09, 2024 07:36

Why blame the media alone, people of the are equally responsible for deterioration of state by voting Dravidian parties alternatively as these parties offer cash, briyani and liquor during election and freebies after winning.


Mohan
அக் 08, 2024 21:55

காஷ்மீரில் வெற்றி பெற்றது பற்றி பேசிய விடியல் சம்பள விசுவாசியே காஷ்மீரில் பிரச்னைகள் அடங்கி இருந்தாலும் அங்கே இருப்பவரெல்லாம் முஸ்லீம் முல்லாக்கள் மற்றும் அவர்களை வைத்து அரசியல் பண்ணும் பரூக் அப்துல்லா போன்றவர்களின் ""சமூக ஒதுக்கல்"" பிளாக் மெயில் மிரட்டல்களுக்கு பயந்தே தான் ஓட்டுப்போட்டிருக்கின்றனர். அந்த வகையில் பெற்ற வெற்றியில் ""கான் கிரஸ்"" கூட்டணியினர் புளகாங்கிதம் அடைய ஒன்றுமில்லை. வெயிட் அணடு சீ... ஜே.கே.என்.சி... காரர்கள் கான்கிரஸை என்ன பாடு படுத்தப்போகிறார்கள் என்பதை வேடிக்கை பார்ப்போம்..


Ramesh Sargam
அக் 08, 2024 21:13

காஷ்மீரில் தோற்றிருந்தாலும், அது தோல்வியாக கருதமுடியாது. கூட்டணி இல்லாமல் அங்கே தனியாக பாஜக பல இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் இந்த வெற்றி ஹிமாலய சாதனைதான். போகப்போக பாஜக வலுப்பெறும் காஷ்மீரில்.


M Ramachandran
அக் 08, 2024 20:51

முஸ்லீம் மக்களை கொண்ட பகுதி காஷ்மீர். அங்கு முல்லா ஓதும் இடத்தில் பிரக்கும் பாகிஸ்தான் கட்டளைக்கு கீழ் படிப்பவர்கள் அதனால். பா ஜ க ஒரு ஹிந்து மக்கள் கட்சி என்ற பிம்பத்தை உண்டாகி உள்ளார்கள். அந்த மனபான்மையை உருவாக்கியுள்ளார்கள் . மறுபடியும் கல்லெறி சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்க போகிறது. பெண்கள் பழய படி பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்க போகிறார்கள்.


Anu Sekhar
அக் 08, 2024 20:17

எந்த இரு கட்சிகளுக்கும் இருக்கும் வேற்றுமையை பாருங்கள். பிஜேபி அது தோற்ற இடத்தில் வெற்றி பெற்ற கட்சிக்கு பெருந்தன்மையா பாராட்டு தெறிவித்திருக்கு . இந்த பப்பு கட்சி காழ்ப்புணர்வை காட்டுகிறது. பிஜேபியிடம் நல்ல நாகரீகத்தை கற்றுக்கொள்ளுங்கள்.


enkeyem
அக் 08, 2024 20:04

காலையில் முதல் சுற்று எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் முன்னணியில் இருந்த நிலையில், ஆஹா பிஜேபி–யை இந்தியாவை விட்டே துரத்துவோம் என்று புளகாங்கிதம் அடைந்த நீ இப்போது கதறுகிறாயா? நல்ல கதறு...


Sundar R
அக் 08, 2024 19:51

ஹரியானா தேர்தல் முடிவுகள் இந்த நாளை இனிய நாளாக ஆக்கிவிட்டது. இன்றைய ஒரு நாள் வாழ்க்கையில் வெற்றி நெருங்கும் திக் திக் வேளையில் பாஜக வெற்றி பெற்ற பிறகு பெரிய நிம்மதியும் பெருமூச்சும் விட முடிந்தது. ஹரியானா மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


புதிய வீடியோ