சனாதனம் வலுப்பட வேண்டும்!
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை தான், மஹா கும்பமேளா சொல்லும் செய்தி. கும்பமேளாவில் பங்கேற்கும் துறவியர், பக்தர்கள் அனைவரும் இந்த செய்தியை முன்னெடுத்து செல்ல வேண்டும். இதன் வாயிலாக சனாதன தர்மம் வலுபெறும். அது வலுபெற்றால் நம் நாட்டுக்கு பலம் கூடும்.யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர், பா.ஜ.,மதிப்பீடுகளை புதைக்கின்றனர்!
அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்தும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு அனைத்து அரசியல் சாசன மதிப்பீடுகளையும் புதைக்கிறது. மக்களின் உரிமைகள், குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் மறுக்கப்படுகிறது.மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்மாநில அந்தஸ்து வேண்டும்!
நம் நாடு குடியரசானது முக்கியமான தினம். இந்த நாளில், ஜம்மு - காஷ்மீர் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கப்படும் என நம்புகிறேன். பிரதமர் மோடி ஏற்கனவே வாக்குறுதி அளித்தது போல், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.பரூக் அப்துல்லா, தலைவர், தேசிய மாநாட்டு கட்சி