உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி மைக்ரோசாப்ட் முதலீடு: பிரதமரை சந்தித்த பிறகு சத்யநாதெல்லா அறிவிப்பு

இந்தியாவில் ரூ.1.57 லட்சம் கோடி மைக்ரோசாப்ட் முதலீடு: பிரதமரை சந்தித்த பிறகு சத்யநாதெல்லா அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆசியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவான சத்யநாதெல்லா, இந்தியா வந்துள்ளார். இன்று (டிச.,09) டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nowlrghu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

உறுதி

இதனைத் தொடர்ந்து சத்யநாதெல்லா தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் ஏஐ வாய்ப்பு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் கலந்துரையாடிய பிரதம் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் லட்சியங்களை ஆதரிக்க, ஆசியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய முதலீடாக 1.57 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு முதல், எதிர்காலத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு திறன்கள், உருவாக்குவதற்காக முதலீடு செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரதமர் மகிழ்ச்சி

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; செயற்கை நுண்ணறிவு துறையைப்பொறுத்தவரை இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கையுடன் உள்ளன. சத்ய நாதெல்லா உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் நடந்தது. ஆசியாவிலேயே அதிகளவு முதலீட்டை இந்தியாவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்ய உள்ளது மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவின் சக்தியை பயன்படுத்த இந்த வாய்ப்பை இந்திய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு அந்தப் பதவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கூகுள் முதலீடு

ஆந்திராவில் மிகப்பெரிய டேட்டா சென்டர் அமைக்க 1.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

RAMESH KUMAR R V
டிச 09, 2025 21:34

அபாரமான இந்தியாவின் வளர்ச்சி ஆகவே இதுபோன்ற முதலீடுகள் குவிகின்றன. ஜெய் ஹிந்த்


Ramesh Sargam
டிச 09, 2025 21:20

சத்யநாதெல்லா அவர்களுக்கு நன்றி. அதே நேரத்தில் டிரம்ப் அவரை ஒன்றும் செய்யாமல் இருக்கவேண்டும்.


Kannan Chandran
டிச 09, 2025 20:48

ஸ்டாலினின் சுற்றுலா காரணமாகவே இந்த முதலீடு வந்தது என சில சில்லரை உருட்டுகள் உருட்டுவார்கள்.


rajasekaran
டிச 09, 2025 20:43

இது பிஹாரில் வந்தால் மிகவும் நல்லது.


Balas Nagas
டிச 09, 2025 20:37

கண்டிப்பா தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பு இல்ல. ஆந்திர அள்ளிடுவாங்க .


rama adhavan
டிச 09, 2025 20:24

எங்கு இந்த முதலீடு வரும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. சென்னையா பெங்களூரா? ஹைதராபாத்தா?


Thravisham
டிச 10, 2025 02:50

பெங்களூருவுக்கு வந்தால் சிறப்பு.


Ramesh Sargam
டிச 09, 2025 20:06

Suppose if the investment is in Tamil Nadu, the state CM Stalin will affix his state seal as if he brought the investment. Habits die hard.


தாமரை மலர்கிறது
டிச 09, 2025 20:00

இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிஜேபி அரசை அசைக்க முடியாது என்பதால், வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவை நோக்கி படையெடுக்கின்றன. இந்தியாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது.


Ramesh Sargam
டிச 09, 2025 19:38

சபாஷ். இதுபோன்று சுந்தர் பிச்சை போன்ற மற்ற இந்திய வம்சாவளியினரும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரவேண்டும். இந்தியாவை வளர்ச்சி அடைய செய்யவேண்டும்.


Skywalker
டிச 09, 2025 19:34

Good to hear, and hoping this gives employment for people


புதிய வீடியோ