வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வயநாட்டில் வெள்ளத்தில் பலர் இறந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு உதவ ஏன் செல்லவில்லை? ஒருவேளை ப்ரியங்கா அங்கு வெற்றிபெற்றிருப்பதால் அவர் பார்த்துக்கொள்வார் என்று இந்த ராகுல் வயநாட்டை கைகழுவிவிட்டாரோ?
புதுடில்லி: ஒடிசா ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், உயிர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியம். இதில் தவறு நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மிகப்பெரிய துயரம். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த பக்தர்கள் விரைவில் குணமடைய வேண்டும். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களையும் வேண்டுகிறேன். இது போன்ற துயர சம்பவங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டு முழுமையாக பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதற்கான இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை. உயிர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. இந்த பொறுப்பில் எந்த தவறும் ஏற்றுக் கொள்ள முடியாதது.இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
வயநாட்டில் வெள்ளத்தில் பலர் இறந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு உதவ ஏன் செல்லவில்லை? ஒருவேளை ப்ரியங்கா அங்கு வெற்றிபெற்றிருப்பதால் அவர் பார்த்துக்கொள்வார் என்று இந்த ராகுல் வயநாட்டை கைகழுவிவிட்டாரோ?