உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கியது கடல் புறா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்படை தளத்தை உளவு பார்க்க வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அந்த கருவி தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது..கர்நாடகாவின் கார்வார் பகுதியில் நாட்டின் முக்கிய கடற்படை தளம் உள்ளது. இதன் அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்ட ஒரு கடல் புறா, நேற்று (டிச.,17) பறக்க முடியாத நிலையில் பிடிபட்டது.கடல் புற பிடிபட்ட இடத்துக்கு மிக அருகே, ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளம் இருப்பதால் அதிகாரிகள் உஷாராகினர். இங்கு இந்தியாவின் முன்னணி விமானம் தாங்கி போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. வனத்துறையின் கடல்சார் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில், 'அதன் முதுகில் இருக்கும் ஜிபிஎஸ் கருவி, கடல் புறாவின் இடப்பெயர்வு குறித்து ஆய்வு செய்யும் ஒரு அறிவியல் கருவி' என்று கண்டறியப்பட்டது.அந்த ஜிபிஎஸ் கருவியில் இருந்த இ-மெயில் முகவரி, சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தது. இந்த பறவை, 10,000 கி.மீ. தூரம் பயணித்து கர்நாடக கடற்கரைக்கு வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.ஜி.பி.எஸ்., சாதனத்தில் உளவு கேமராக்கள் அல்லது பிற சந்தேகத்திற்கிடமான மென்பொருள்கள் உள்ளதா என்பதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அந்த கடல் புறா வனத்துறையினரின் பராமரிப்பில் சிகிச்சை பெற்று வருகிறது. இதேபோன்ற ஒரு சம்பவம் நவம்பர் 2024ல் கார்வாரில் நடந்தது. ஜி.பிஎஸ்., பொருத்தப்பட்ட ஒரு கழுகு பிடிபட்டது; ஆய்வில், அது பறவைகளின் இடம் பெயர்வு குறித்த ஆராய்ச்சிக்காக பொருத்தப்பட்ட கருவி என்று உறுதி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mathi Mathi
டிச 19, 2025 12:20

Allott


yasomathi
டிச 19, 2025 07:03

புறாவுக்கு பேசத் தெரியாது அதனால் அவன் அப்படி சொல்கிறான் இதை இந்திய பக்கம் பறக்க விட்டதே அவன் தான் நாம் நம்ம ஊரு காக்கை புடிச்ச அவங்க ஊருக்கு அனுப்பனும் அவன் புடிச்சதும் அது வெடிக்கணும் ... அப்பதான் சரிப்பட்டு வருவான்


Venkataraman
டிச 18, 2025 22:39

இதேமாதிரி யுக்திகளை வைத்து நமது நாடும் சீனாவையும் பாகிஸ்தானையும் மற்ற நாடுகளையும் உளவு பார்க்கலாம். செயற்கை கோள் மூலமாகவும் ட்ரோன்கள் மூலமாகவும் உளவு பார்க்கிறார்கள்.


Anbuselvan
டிச 18, 2025 22:10

இந்த சீனர்கள் சும்மாகவே இருக்க மாட்டாங்க போல இருக்கே. அடங்க மாட்டேங்கறாங்களே. அந்த நாடு முந்தைய சோவியத் யூனியனை போல பிரிந்து போகும் நாள் வெகு தூரம் இல்லை. அதில் திபெத் பகுதி நம் நாட்டோடு நல்லிணக்கத்தோடு இருக்கும். எல்லோருக்கும் நிம்மதி கிடைத்து வளர்ச்சியின் பாதையில் செல்லும்.


Vasan
டிச 18, 2025 21:47

திரை கடலோடி, பறந்து, திரவியம் தேடிய அந்த புறாவிற்கு வாழ்த்துக்கள்.


Dharani Manogaran
டிச 18, 2025 20:12

இந்த பிரசுராமே சீனா உளவு அமைப்புக்கு கொடுத்த தகவல் தான் கடைசியாக "ஜிபிஎஸ் இடத்துக்கு மிக அருகே, ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளம் ,போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன"


Barakat Ali
டிச 18, 2025 20:49

நீங்க யோசிச்ச அளவுக்கு கடற்படைக்கு யோசிக்கத் தெரியலையே ????


அப்பாவி
டிச 18, 2025 19:42

இன்னிக்கி புறா. நாளைக்கி ட்ராகன், பாண்டா எல்லாம் கொண்டாந்து எறக்குவான்.


புதிய வீடியோ