உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை!

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நாளை (மே 31) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா - பாக்., இடையே கடந்த 10ம் தேதி போர் நிறுத்தம் அமலானது. எனினும், இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குஜராத், ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில், போர் ஒத்திகையை நேற்று நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.இரு நாடுகளுக்கும் இடையே போர் நடக்கும்போது, பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்று பயிற்சி அளிப்பதே போர் ஒத்திகை. இதுதவிர தங்களையும், தங்கள் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடக்கவில்லை. நிர்வாக சீர்திருத்த காரணங்களால் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைத்து எல்லைய ஒட்டியுள்ள மாநில அரசுகள் அறிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் நாளை (மே 31) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, கடந்த 7ம் தேதி நாடு முழுதும் போர் ஒத்திகையை மத்திய அரசு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Nada Rajan
மே 30, 2025 08:35

மத்திய அரசு சரியான தேதியை அறிவித்தால் அதிகம் நன்றாக இருக்கும்


Narayanan Muthu
மே 30, 2025 08:15

எல்லாம் சரியாதான் போயிட்டிருக்கு ஆனால் அந்த தீவிரவாதிகள் பகல்காமுக்கு உள்ள எப்படி வந்தார்கள் எங்கு இருக்காங்க இல்ல வெளிய போய்ட்டாங்கன்னா எப்படி போனாங்க இதுவரை மர்மமாகவே உள்ளது. மௌனமே பதிலாக உள்ளது.


vivek
மே 30, 2025 10:34

முடிஞ்ச ஒரு எட்டு போய் பார்த்திட்டு முடிஞ்ச வந்துரு....


vivek
மே 30, 2025 10:35

திராவிட சோம்பு.. அந்த சாரை கண்டுபிடிக்க வக்கில்லை... வந்துட்டே....


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 30, 2025 12:24

தமிழகம் வழியாக கூட பெஹல்காம் போயிருக்கலாம் விசாரித்தால் உண்மை தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை