உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள முதல்வர் பினராயுடன் செல்பி : மேலும் மேலும் காங்கிரசை கடுப்பேற்றும் சசிதரூர்

கேரள முதல்வர் பினராயுடன் செல்பி : மேலும் மேலும் காங்கிரசை கடுப்பேற்றும் சசிதரூர்

திருவனந்தபுரம்: தொடர்ந்து கட்சி மேலிடத்தை கடுப்பாக்கி வரும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இன்று (12.03.2025) கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் இருந்து நான்கு முறை தொடர்ந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள, காங்கிரசை சேர்ந்த சசிதரூர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். ஐ.நா., சபையில் உயர் பதவி வகித்தவர் என பன்முகம் கொண்டவர். சமீபத்தில் அமெரிக்காவில் பிரதமர் மோடி - டெனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல்வர் பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து தள்ளியது , என இவரது செயல்கள் காங்கிரஸ் மேலிடத்தை கடுப்பாக்கியுள்ளது.கடந்த பிப்ரவரி 25-ம் தேதியன்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றி காங்கிரசை மேலும் கடுப்பேற்றியுள்ளார்.இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்து வந்தார். காங்கிரசுக்கு நான் தேவை என்றால் கட்சியில் இருக்கிறேன். நான் உங்களுக்கு தேவை இல்லை என்றால் புத்தகங்கள், சொற்பொழிவுகள், உலகம் முழுதும் நிகழ்ச்சிகள் என எனக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார்.இந்நிலையில் கேரள கம்யூனிஸ் கட்சி முதல்வர் பினராயி உடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.டில்லி சென்றுள்ள கேரள பினராயி விஜயன், உடன் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரையும் அழைத்துச்சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாமானை சந்தித்து மாநில நிதி ஒதுக்கிட வலியுறுத்தியுள்ளார். பின்னர் நடந்த விருந்து நிகழ்ச்சியின் போது சசிதரூர் பினராயை சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மேலிடம் இன்று வெளியான புகைபடத்திற்கு சசிதரூர் செயலுக்கு காங்., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Velan Iyengaar, Sydney
மார் 13, 2025 08:25

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. இன்டி கூட்டணி தலைவர்களின் வழக்கமான சந்திப்பு. ராவுள் கூட சந்தித்தார். அப்போ அவரைத்தான் முதலில் கட்சியை விட்டு நீக்க வேண்டும்


Kasimani Baskaran
மார் 13, 2025 04:01

மாநிலம் என்று வந்துவிட்டால் கேரள கம்மிகள் யாருடன் வேண்டுமானாலும் இணைவார்கள்.. தமிழக கம்மிகள் போல அவர்கள் மாநிலத்துக்கு விரோதமாக நடப்பதில்லை. மும்மொழிக்கொள்கையை வைத்து அரசியல் கூட செய்யவில்லை.


எவர்கிங்
மார் 13, 2025 03:48

வழக்கமாக இவர் பெண்களுடன் தானே குல்பி எடுப்பார்


மாலா
மார் 13, 2025 00:51

அவங்களாக நீக்கட்டும்னு எதிர்பாக்குரான்


கிஜன்
மார் 12, 2025 21:35

இவர் ஆண்களுடன் எடுத்த முதல் செல்பி இதுவாகத்தான் இருக்கும் ....


oviya vijay
மார் 13, 2025 08:21

கிஷன் கேரளாவுக்கும் முட்டா...? வரும்படி ரொம்ப ஜாஸ்தி போல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை