உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதியவர்களுக்கான கால்பந்து போட்டி கேரள அணி வின்னர்; ஊட்டி அணி ரன்னர்

முதியவர்களுக்கான கால்பந்து போட்டி கேரள அணி வின்னர்; ஊட்டி அணி ரன்னர்

தங்கவயல்: தங்கவயல் கால்பந்து பேரவை சார்பில் நடந்த 50- - 60 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில், கேரள முன்னாள் ராணுவ வீரர்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.தங்கவயல் கால்பந்து பேரவை தலைவர் சைமன், செயலர் ரவி, அமைப்பாளர் கருணா மூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் நேற்று முன் தினம் ஒரு நாள் கால்பந்து போட்டி நடந்தது.இப்போட்டிகளில், ஆர்.கே., வெட்ரன்ஸ், கேரள முன்னாள் ராணுவ வீரர்கள், பெங்களூரு பெரியார் நகர், மலபார் மாஸ்டர் கேரளா, பெங்களூரு பில்லண்ணா கார்டன், ஊட்டி மார்னிங் ஸ்டார், பெங்களூரு பிரண்ட்ஸ் வெட்ரன்ஸ், கேரளா டைகர்ஸ், சென்னை அம்பேத்கர், தங்கவயல் விளையாட்டு பேரவை ஆகிய 10 அணியினர் பங்கேற்று விளையாடினர்.

கால் இறுதி ஆட்டம்

காலை 9:00 மணிக்கு, ஆர்.கே., வெட்ரன்ஸ் அணியும், கேரள முன்னாள் ராணுவ வீரர்கள் அணியும் மோதினர். இதில், கேரள அணியினர் வெற்றி பெற்றனர்.காலை 9:45 மணிக்கு, பெரியார் நகர் அணியும், மலபார் மாஸ்டர் அணியும் விளையாடின இதில் மலபார் மாஸ்டர் அணி வெற்றி பெற்றது.காலை 10:30 மணிக்கு, ஊட்டி மார்னிங் ஸ்டார் அணியும், பெங்களூரு வெட்ரன்ஸ் அணியும் விளையாடின. இதில் ஊட்டி அணி வென்றது.காலை 11:45 மணிக்கு, கேரள டைகர்ஸ்அணியும், சென்னை அம்பேத்கர் அணியும் விளையாடின. இதில் கேரள அணி வென்றது.

அரை இறுதி ஆட்டம்

பகல் 1:45 மணிக்கு, கால் இறுதியில் வெற்றி பெற்ற அணிகள், அரை இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றன.கேரள முன்னாள் ராணுவ வீரர்கள் அணியும், கேரள டைகர்ஸ் அணியும் மோதியதில், கேரள முன்னாள் ராணுவ வீரர்கள் வென்று, இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.பகல் 2:45 மணிக்கு, கால் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஊட்டி மார்னிங் ஸ்டார் அணியும், தங்கவயல் விளையாட்டு அகாடமியும் மோதின. இதில் ஊட்டி மார்னிங் ஸ்டார் அணி வெற்றிப் பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.மாலையில் நடந்த இறுதி ஆட்டத்தில், கேரள முன்னாள் ராணுவ வீரர்கள் அணியும், ஊட்டி மார்னிங் ஸ்டார் அணியும் மோதின. இரு அணிகளும் கோல் போடவில்லை. இந்நேரத்தில் மழை பெய்ய துவங்கியது. இருள் சூழ்ந்தது. இதனால் இரு அணியினரையும் அழைத்து, 'டாஸ்' போடலாமா என நடுவர் கேட்டார். அவர்கள் சம்மதித்ததால், டாஸ் போடப்பட்டது. இதில், கேரள முன்னாள் ராணுவ வீரர்கள் அணியினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.ஊட்டி மார்னிங் ஸ்டார் அணியினர் ரன்னராக அறிவிக்கப்பட்டனர். வென்ற அணிக்கு 15 ஆயிரம் ரூபாய், கோப்பை; இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 5,000 ரூபாயும், கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.தங்கவயலில் 50- - 60 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியில் பங்கேற்ற இரு அணியினர் குழு படம் எடுத்துக் கொண்டனர். இடம்: ராபர்ட்சன்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை