உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிப்டி 23,100 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது.தொடர்ந்து ஐந்தாவது நாளாக இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. வர்த்தக முடிவில், நிப்டி 23,100 க்குக் கீழே இருந்தது. நிப்டி 50 குறியீட்டில், 4 பங்குகள் பச்சை நிறத்திலும், 46 பங்குகள் சிவப்பு நிறத்திலும் முடிந்தன. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் அல்லது 1.32 சதவீதம் சரிந்து 76,293.60 ஆகவும், நிப்டி 309.80 புள்ளிகள் அல்லது 1.32 சதவீதம் சரிந்து 23,071.80 ஆகவும் இருந்தது.இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ், கிர்சம், டிரென்ட், பார்தி ஏர்டெல் ஆகிய பங்குகளின் விலை ஏற்றத்துடனும், அப்பல்லோ ஹாஸ்பிட்டல், ஐஷர் மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், கோல் இந்தியா, பாரத் எலக்ட்ரானிக் ஆகிய பங்குகளின் விலை சரிந்தும் வர்த்தகமானது.வங்கி, ஆட்டோ, மெட்டல் மற்றும் ஐடி பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. மேலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லாதது, அமெரிக்காவின் வர்த்தக கொள்கை, எப்.ஐ.ஐ., வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக பங்கு வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KRISHNAN R
பிப் 11, 2025 19:43

கணக்கு.வந்தா...தானே இங்க கனக்கு... இல்லாதது தான் அதிகம்


ஆரூர் ரங்
பிப் 11, 2025 18:14

மார்க்கெட் சரிவு. பொருளாதார நிலை சுமார். ஆனால் (வரி விகிதங்களை மாற்றாமலேயே) நேரடி, மறைமுக வரிகளின் வசூல் அதிகரிக்கின்றன. காரணம் வரிஏய்ப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இதுதான் நியாயமற்ற வணிகர்கள் அரசியல்வாதிகளை எரிச்சலடைய வைக்கிறது. மார்க்கெட் மீண்டும் உயரும். நியாயமான அளவுக்கு.


புதிய வீடியோ