உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எகிறிய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 3000 புள்ளிகள் அதிகரிப்பு

எகிறிய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 3000 புள்ளிகள் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பங்குச்சந்தைகளில் இன்று திடீர் மாற்றம் காணப்பட்டது. சென்செக்ஸ் 3000 புள்ளிகள் அதிகரித்தது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாக். ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பின்னர் இந்தியா, பாக். இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட, அதன் தாக்கம் பங்குச்சந்தைகளில் இன்று எதிரொலித்தது. விடுமுறை முடிந்து இன்று தொடங்கிய வர்த்தகத்தின் தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவியது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்ந்து 82,429 புள்ளிகளில் முடிந்தது. அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை நிப்டி 912 புள்ளிகள் உயர்ந்து 24,920 ஆக நிறைவடைந்தது. இந்தியா, பாக். சண்டை நிறுத்தம், அமெரிக்கா, சீனா இடையேயான சுவிட்சர்லாந்தில் வைத்து நடைபெற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஆகியவையே பங்குச்சந்தைகளின் சீரான முன்னேற்றத்துக்கு காரணம் என்று முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Barakat Ali
மே 12, 2025 19:35

இதைப் பற்றித் தெளிவில்லாதவர்கள் சூதாட்டம் என்று கூறுவது தவறு .... இஸ்லாத்தில் கூட இது ஹராம் என்று நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை ....


J.Isaac
மே 12, 2025 18:35

சூதாட்டம்


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
மே 12, 2025 19:17

எரியுதா மூர்க்ஸ்?? எங்க பணம், எப்படி எங்க சம்பாதிக்கணும்னு எங்களுக்கு தெரியும், உங்க பொறுக்கிஸ்தான் ல பங்கு சந்தை ஊத்தி மூடிக்கிச்சாம், போயி சிறப்பு தொழுக பண்ணு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை