மேலும் செய்திகள்
லாரி கொள்ளையருடன் துப்பாக்கி சண்டை
11-Apr-2025
பிரசாந்த் விஹார்: தேசிய தலைநகரில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த மாதம் 26ம் தேதி பிரேம் ஆதார் மருத்துவமனை அருகே மளிகைக்கடைக்காரர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல், வழிமறித்து பணம், மொபைல் போன், மளிகைச்சாமான்களை கொள்ளையடித்துச் சென்றது.அதே நாளில் பிரசாந்த் விஹார் பகுதியில் டீ விற்கும் வியாபாரியை வழிமறித்து பணம், மொபைல் போன் மற்றும் ஆவணங்களை நான்கு பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றதாக புகார் செய்யப்பட்டது.இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.இதையடுத்து- ஷாஹிப் ஆலம், 24, ராகுல் கபூர், 26, சிவம், 24 சிம்ரன்ஜீத், 22, ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், இரண்டு ராயல் என்பீல்டுகள் உட்பட மூன்று திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளை போலீசார் மீட்டனர்.
11-Apr-2025