சத்தீஸ்கரில் ஏழு நக்சல்கள் சுட்டு கொலை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பிஜப்பூர்: சத்தீஸ்கரில் இந்த மாதம் முதல் வாரத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் ஏழு நக்சல்கள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா பகுதியில், ஜூன் 4 முதல் 7 வரை பாதுகாப்பு படையினர் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் இரு தலைவர்கள் உள்பட ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.அவர்களில் ஒருவர் தடை செய்யப்பட்ட அமைப்பான சி.பி.ஐ., மாவோயிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் சுதாகர் என்பதும், இவரது தலைக்கு சத்தீஸ்கர் அரசு 40 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்ததும் தெரியவந்தது.மற்றொருவர் தெலுங்கானா மாநில மாவோயிஸ்ட் கமிட்டி சிறப்பு உறுப்பினர் பாஸ்கர் என்பதும், அவரது தலைக்கு சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா அரசுகள் 45 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்திருந்தன.இந்நிலையில், கொல்லப்பட்ட ஏழு நக்சல்களின் உடல்களும் மீட்கப்பட்டுஉள்ளதாக பாதுகாப்பு படை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.