உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்தது; இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்!

மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்தது; இடிபாடுகளில் சிக்கிய 7 பேர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து, 12 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 7 பேரை தேடும் பணி நடக்கிறது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 3 மாடி கட்டடத்தின் ஒரு வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இதுவரை 12 பேர் காயங்கள் உடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் 7 பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ''மீட்பு பணிகள் முடிந்த பிறகு முழு விபரங்கள் தெரிவிக்கப்படும்'' என மும்பை போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

V RAMASWAMY
ஜூலை 18, 2025 19:54

கேஸ் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. சமபந்தப்பட்ட கம்பெனிகள் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.


Nada Rajan
ஜூலை 18, 2025 16:20

மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை