உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் வாக்காளர் பட்டியல்; வெளிநாட்டினர் ஏராளம் பேர் இருப்பதாக தேர்தல் கமிஷன் தகவல்

பீஹார் வாக்காளர் பட்டியல்; வெளிநாட்டினர் ஏராளம் பேர் இருப்பதாக தேர்தல் கமிஷன் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில், வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டு உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் விசாரணை நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜோய்மாலியா பக்ஷி அமர்வு விசாரணைக்கு வந்தது. தலைமை தேர்தல் கமிஷன் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த சரிபார்ப்பு பணியின்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் அட்டைகளையும் உரிய ஆவணமாக கருத்தில் கொள்ளும்படி தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில், வாக்காளர் திருத்த பட்டியலை தயார் செய்யும் பணியில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விசாரணை உரிய முறையில் ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் நடத்தப்படும். வரும் செப்டம்பர் 30ம் தேதி இறுதி வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியிடப்படும். சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள் சேர்க்கப்படாது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Samooga Neethi
ஆக 01, 2025 04:52

அண்டை நாடுகளிலிருந்து நமது நாட்டிற்குள் ஊடுருவி, நமது நாட்டிலேயே பிழைப்பு நடத்துபவர்களுக்கு, நமது நாட்டு தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிப்பது, எரியும் கொள்ளிக்கட்டையால் தலையை சொரிந்துகொள்வதற்கு சமம். நமது நாட்டில் குடியுரிமை பெற்றவர்களுக்கான தனி அடையாள அட்டை இல்லாத நிலையை, 70 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உருவாக்கி வைத்ததே, நமது நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக அரங்கேற்றப்பட்ட மிகப்பெரிய சதியாகும்


Erode Saravanan
ஜூலை 13, 2025 20:59

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது அசாம் மாணவர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அந்நிய நாட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. மேலும் முஸ்லீம்களின் வாக்குகளை பெற வேண்டி காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணியினர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை . தற்போது நடவடிக்கை எடுக்க முயலும் போது திருமா உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்ற கதவை தட்டுகிறார்கள்.


மனிதன்
ஜூலை 13, 2025 20:30

நீங்கல்லாம் என்ன கம்பு சுத்துனாலும் உண்மை மக்களுக்கு தெரியும்... ஆதாரத்திற்கு ஆதார்கார்டு செல்லாதாம்,ரேஷன் கார்டு செல்லாதாம்,பழைய ஓட்டர் ID செல்லாதாம், எதுசெல்லுமென்று கேட்டால் தாய் தந்தையரின் பிறந்தநாள் ஆவணம் உட்பட 11 ஆவணங்கள் வேண்டுமாம் அவனுக்கே இருக்காது அவன் அப்பனோடதுக்கு அவர் எங்க போவான்? இதெல்லாம் படிப்பறிவுள்ள நம் மாநிலத்திலேயே பலருக்கும் கிடைப்பது கடினம் .. கள்ளக்குடியேறிகள் என்றால் ஆதார்கார்டு ,ரேஷன் கார்டு , ஓட்டர் ID இதெல்லாம் நீங்கள்தானே கொடுத்தீர்கள்? ஏன் கொடுத்தீர்கள்... அப்படியென்றால் கடந்த தேர்தல்களிலெல்லாம் நீங்கள் பெற்ற வெற்றி செல்லாதா??


தமிழ்வேள்
ஜூலை 13, 2025 20:21

மாநில அரசுகளுக்கு அதிக ரெவின்யூ நில அதிகாரங்கள் கொடுத்தால் இப்படித் தான் இருக்கும்.... தற்போது உள்ள அதிகாரிகள் வெகுவாக குறைக்கப்பட வேண்டும்.. அல்லது மொழிவாரி மாநிலங்கள் அமைப்பை முற்றிலும் கலைத்து மாகாண/ பிராவின்ஸ் முறையை கொண்டு வர வேண்டும்.. டெல்லி போல சென்னை பெங்களூர் ஹைதராபாத் கொல்கத்தா மும்பை கொச்சி நகரங்கள் தனி யூனியன் பிரதேசங்கள் ஆக மாற்றப்பட வேண்டும்.. இல்லை என்றால் தேசவிரோத செயல்பாடு மற்றும் சிந்தனைகளை ஒழிப்பது கடினமான வேலையாக இருக்கும்


SVR
ஜூலை 13, 2025 18:11

வாக்கு வங்கி போகப்போகிறதே என்கிற பயம். அதற்கு தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு. இவ்வளவு நாள் இந்த நாட்டு குடிமகனாக இல்லாமலேயே இந்திய தேர்தலில் வாக்களித்து வந்தவர்கள் இனிமேல் அப்படி செய்ய முடியாது. இந்த நாட்டு பிரஜையாக இல்லாதவர்கள் இனிமேல் வரும் தேர்தல்களில் ஓட்டு போட விடாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும். இது அகில இந்தியாவிலும் அமல் படுத்த வேண்டும்.


என்றும் இந்தியன்
ஜூலை 13, 2025 18:02

அப்படிப்பார்த்தால் மேற்கு வங்காளத்தில் 2.1 கோடி பங்காளதேசிகள் இருப்பது தெரிந்து விடுமே


T.sthivinayagam
ஜூலை 13, 2025 17:40

மத்திய உள்துறை அமைச்சகமும் புலனாய்வு துறையும் துங்குகிறதா


krishna
ஜூலை 13, 2025 17:07

MANIDHAN UN BOLI PEYAR PORUNDHA VILLAI.MIRUGAM CORRECTAA SET AAGUM.


N Sasikumar Yadhav
ஜூலை 13, 2025 16:59

இதுபோல மேற்குவங்கத்தில் செய்ய வேண்டும்


Priyan Vadanad
ஜூலை 13, 2025 16:22

நினைக்கும் காரியத்தை முடிக்க எதையும் சொல்வோம் எதையும் செய்வோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை