உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவமானகரமான செயல்!

அவமானகரமான செயல்!

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஏவலுக்கு ஏற்ப தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் செயல்படுவது அவமானகரமான செயல். அந்த பதவியில் அவர் நீடிப்பது, நம் அரசியலமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். தன் மீதான குற்றச்சாட்டை தேர்தல் கமிஷனர் மூடி மறைக்க முடியாது. - ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்கிரஸ்

வெற்றிடத்தை நிரப்புவோம்!

தெலுங் கானா மக்களிடம் இருந்து பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி விலகி சென்றுவிட்டது. காங்., மீது அதிருப்தி எழுந்துள்ளது. எனவே, இங்கு புதிய அரசியல் கட்சியின் தேவை எழுந்துள்ளது. அந்த வெற்றிடத்தை நாங்கள் நிரப்புவோம். சொந்த கட்சியல் இருந்து வெளியேற்றப்பட்ட எனக்கும், என் ஆதர வாளர்களுக்கும் தெலுங்கானா மக்களே உண்மையான குடும்பம். கவிதா, தலைவர், தெலுங்கானா ஜக்ருதி அமைப்பு

போலியான பிம்பம்!

மேற்கு வங்கத்தில், முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், தற்போது பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனா ல், சதவீதம் அதிகரித்திருப்பது உண்மைதான். இதற்கு எஸ்.ஐ.ஆர்., தான் காரணம். ஆனால், மாற்றம் வேண்டி மக்கள் ஓட்டளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா போலியான பிம்பத்தை உருவாக்க முயல்கி றார். - டெரிக் ஓ பிரைன், ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
ஏப் 25, 2026 09:45

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரசை களைத்து விட வேண்டும் என்று காந்தி சொன்னதாக சொல்வார்கள்; இன்றுள்ள காங்கிரஸ் குடும்ப தலைமையும் சரி எடுபிடி தலைவர்களும் சரி... கட்சியின் அழிவுக்கு காரணமாக இருப்பார்கள்.... பொது மக்கள் நலன் என்பதே கட்சி கொள்கைகளில் கிடையாது போலும்.


Mecca Shivan
ஏப் 25, 2026 08:17

ஜெயராம் ரமேஷ் - பாகிஸ்தான் காங்கிரஸ் தலைவர். டெரெக் ஓபிரையன் - பங்களாதேஷ் காங்கிரஸ் தலைவர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை