உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழிவாங்கும் அரசியலை கைவிடுங்கள்; இலங்கை அரசுக்கு சொல்கிறார் காங் எம்பி சசி தரூர்!

பழிவாங்கும் அரசியலை கைவிடுங்கள்; இலங்கை அரசுக்கு சொல்கிறார் காங் எம்பி சசி தரூர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும் என இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைதுக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, 76. அரசு நிதி முறைகேடு வழக்கில், கைது செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவரது கைதுக்கு, காங்கிரஸ் எம்பி சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார்.இது குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, மேலோட்டமாகப் பார்த்தால், அற்பமான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்திருப்பது குறித்து கவலை கொள்கிறேன்.உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அவர் ஏற்கனவே சிறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். இது அவர்களின் உள் விவகாரம் என்பதை முழுமையாக மதிக்கும் அதே வேளையில், பழிவாங்கும் அரசியலை இலங்கை அரசு கைவிட வேண்டும்.முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பல தசாப்தங்களாக தேசத்திற்குச் சேவை செய்துள்ளார். அவர் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிட்டுக்குருவி
ஆக 24, 2025 15:14

அங்கேயும் சட்டங்கள் இருக்கின்றன .நீதிமன்றங்கள் இருக்கின்றன .தேவை இல்லாமல் நாம் மூக்கை நுழைக்கவேண்டாம் .பதவியில் இருந்தால் மொத்த கருவூலமும் தனதாக கருதுவது காங்கிரஸ் ,திராவிடத்தின் கூட்டாளிகளின் இறுமாப்பு .


J.Isaac
ஆக 24, 2025 13:53

முதலில் பாஜக அரசுக்கு கூறுங்கள்


A.Gomathinayagam
ஆக 24, 2025 09:44

இது நமது மாநில, நடுவண் அரசிற்கும் பொருந்தும்


முருகன்
ஆக 24, 2025 09:19

உங்களை வைத்து காங்கிரஸை பழிவாங்குவது மட்டும் சரியா


vivek
ஆக 24, 2025 10:21

திருடனுக்கு லாடம் கட்டுவது சரிதானே முருகன்


Rajah
ஆக 24, 2025 08:20

ராஜபக்ஷ = கருணாநிதி இவ்விருவரையும் எதிரிகள் என்று அடையாளம் காண முடியும் ரணில் = ஸ்டாலின். எதிரிகள் என்று அடையாளம் காண்பது கடினம். ஆனால் முன்னைய இருபரையும் விட பயங்கரமானவர்கள்


Sharma
ஆக 24, 2025 07:47

ஊழல் என்றால் சின்ன ஊழல் பெரிய ஊழல் என்று தரம் பிரித்து பார்க்கலாம் என்று இப்போ தான் புரிகிறது..


GMM
ஆக 24, 2025 07:45

பழி வாங்கும் அரசியலை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். முன்னாள் அதிபர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை இஷ்டம் போல் வாழும் மக்கள் போல் கருத கூடாது. போலீஸ் விசாரிக்க கைது செய்ய அதிகாரம் இல்லை. இந்தியாவில் திராவிட போலீஸ் கண்காணிக்க பட்டு, கட்டுபாட்டில் வைக்க வேண்டும். சசியின் கவலை மக்கள் கவலை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை